பூமி போன்ற புதிய கிரகத்தை கக்ண்டறிந்த கெப்ளர் விண்கலம் !

கெப்ளர் விண்கலம் ஒரு மாபெரும் விண் தொலைநோக்கியாகும். கடந்த 2009ம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்ட கெப்ளர்  தற்போது பூமியிலிருந்து 150 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் சுற்றி வரும் வருகிரது.
பூமி போன்ற புதிய கிரகத்தை கக்ண்டறிந்த கெப்ளர் விண்கலம் !
இந்த தொலை நோக்கி  இதுவரை 1028 கிரகங்களையும், 4661 கிரகம் போன்றவற்றையும் கண்டுபிடித்துத் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கெப்ளர் தொலைநோக்கி கிட்டத்தட்ட பூமி போலவே உள்ள ஒரு புதிய கிரகத்தை கண்டுபிடித்துள்ளதாகவும். இது குறித்த ஆய்வின்  கடைசிக் கட்டத்தில் விஞ்ஞானிகள் இருப்பதாக நாசா தெரிவித்துள்ளது. 

இதற்கு கெப்ளர் 186எப் எனறு பெயரிடப்பட்டது. இது பூமியலிருந்து 500 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. நம்மைப் போலவே உள்ள ஒரு கிரகமாக இது கருதப்படுகிறது.

இது பூமியை விட பெரியது. அதேபோல இந்த ஆண்டு ஜனவரியில் கெப்ளர் 438 பி, 442 பி என மேலும் இரு கிரகங்களை  கண்டுபிடித்தது.
இதில் பி கிரகமானது பூமியை விட 12 சதவீதம் பெரிதாகும். 442 பி கிரகமானது 33 சதவீதம் பெரிதாகும். 

ஜூலை மாதத்தில் கெப்ளர் அதே நட்சத்திரத்தை 4 கிரகங்கள் சுற்றி வருவதாக கண்டுபிடித்தது. அந்த நட்சத்திரத்திற்கு கெப்ளர் 444 என பெயரிடப்பட்டுள்ளது.
Tags:
Privacy and cookie settings