தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய 3 மொழிகளில் தயாரான 'பாகுபலி' படம் திரைக்கு வந்து வெற்றி கரமாக ஓடிக் கொண்டி ருக்கிறது. 'பாகுபலி,' 10 நாட்களில் உலகம் முழுவதும் ரூ. 300 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை புரிந்து இருக்கிறது.
இந்தியில் வந்த முன்னணி நடிகர்கள் பட வசூல் சாதனைகளை எல்லாம் இந்த படம் முறியடித்துள்ளது.'பாகுபலி' படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சி, சென்னை பிரசாத் லேப் ஸ்டூடியோவில் நடந்தது. இதில் படத்தின் கதாநாயகன் பிரபாஸ் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:
''பாகுபலி படம் வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ் நாட்டிலும் இந்த படத்துக்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு அளித்துள்ளனர்.
மூன்று வருடங்கள் இப்படத்துக்காக உழைத்தோம். இதனால் வேறு படங்களில் நடிக்கவில்லை. இதனால் மூன்று, நான்கு படங்களுக்கான சம்பளத்தை இழந்தேன்.
'பாகுபலி' படத்தில் எனக்கு நிறைய லாபம் கிடைத்து இருப்பதாக வதந்தி பரவி உள்ளது. லாபம் கிடைத்தது உண்மை. ஆனால், எல்லோரும் குறிப்பிடுகிற அளவுக்கு பெரிய தொகை வரவில்லை.
இந்த படத்தின் இரண்டாம் பாகம் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது. இதன் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. அடுத்த வருடம் படம் திரைக்கு வரும்.
முதல் பாகத்தில் அனுஷ்கா சம்பந்தப்பட்ட காட்சிகள் குறைவாக இருந்தது. இரண்டாம் பாகத்தில் அவர் நிறைய காட்சிகளில் வருவார்.
'பாகுபலி,' எம்.ஜி.ஆர். நடித்த 'அடிமைப்பெண்' படத்தின் சாயலில் இருப்பதாக சிலர் கூறுகிறார்கள். நான், 'அடிமைப்பெண்' படம் பார்க்க வில்லை. எம்.ஜி.ஆர் பெரிய நடிகர். 'அடிமைப்பெண்' படத்தை போல் 'பாகுபலி' இருக்கிறது என்று சொன்னால் அதை நான் பெருமையாக கருதுகிறேன்.
தமிழ் படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளது. நல்ல கதை அமைந்தால், நேரடி தமிழ் படத்தில் நடிப்பேன்.இவ்வாறு அவர் கூறினார்.
டைரக்டர் லிங்குசாமி பேசும் போது, ''தமிழ் நடிகர் களின் படங்கள் ஆந்திரா வில் வெற்றி கரமாக ஓடுகிறது. பாகுபலி தமிழகத்தில் வெற்றி பெற்றதால் தெலுங்கு நடிகர்கள் படங்கள் தமிழகத்தில் ரிலீசாக வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது'' என்றார்.
ரம்யா கிருஷ்ணன் பேசும்போது, ''பாகுபலி படம் அடிமைப் பெண் படத்தின் சாயலில் இருக்கிறது என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன்'' என்றார். தயாரிப் பாளர்கள்.
டி.சிவா, ஞானவேல் ராஜா, சி.வி.குமார், இசையமை ப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ஆகியோரும் பேசினார்கள்.
டி.சிவா, ஞானவேல் ராஜா, சி.வி.குமார், இசையமை ப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ஆகியோரும் பேசினார்கள்.