மும்பையில் ஒரு மைனர் பெண்ணை பலமுறை மிரட்டியே பலாத்காரம் செய்து சீரழித்து வந்த 3 பாதுகாப்புப் படையினர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் இருவர் கடற்படையினர் ஆவர்.
இதுதொடர்பாக மொத்தம் நான்கு பேர் மீது கப் பரேட் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நான்காவது நபரான ப்ருத்வி என்கிற உமேஷ் சிங் செளகான் கடற்படை வீரர் ஆவார்.
இவர் தற்போது மும்பைக்கு வெளியே பணிநிமித்தமாக உள்ளார். அவரை விசாரணைக்கு வருமாறு போலீஸார் உத்தரவிட்டுள்ளனர். விசாரணைக்குப் பின்னர் அவரும் கைது செய்யப்படவுள்ளார்.
தற்போது ஜிதேந்திர சிங் டரகோகுல் வால்சந்த் (24), பவன் என்கிற ஓம்பால் ஹோஷியார் சிங் (31), ராகேஷ் பிரசாத் சிங் (41) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மைனர் பெண் இந்த நான்கு பேரில் ஒருவருடன் தொடர்பு வைத்திருந்தார். கடந்த மாதம் இருவரும் பிரிந்து விட்டனர். அந்த பெண் பின்னர் இன்னொருவருடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார்.
இதனால் கோபமடைந்த அந்த கடற்படை வீரர், அப்பெண்ணை மிரட்ட ஆரம்பி்த்தார். உனது புதுக் காதலனிடம் உண்மையைச் சொல்லி விடுவேன் என்று மிரட்டி செக்ஸ் உறவுக்கு வலியுறுத்தியுள்ளார்.
இதையடுத்து அப்பெண் அவரது மிரட்டலுக்குப் பணிந்தார். அதன் பின்னர் தனது சக வீரர்களுடனும் அப்பெண்ணை நாசம் செய்யத் தொடங்கினார்.
கடந்த ஜனவரி மாதத்திலிருந்து இந்த நான்கு பேரும் பலமுறை அவரை பலாத்காரம் செய்துள்ளதாக போலீஸார் கூறுகினறனர்.
இந்த வழக்கில் போலீஸாருக்கு முழு ஒத்துழைப்பு தருவதாக கடற்படை அதிகாரிகள் கூறியுள்ளனர்.