ஸ்காட்லாந்தின் டுன்ஃபெர்மின் நகரில் வாழ்ந்துவருபவர் ஜேம்ஸ் க்ரோம்பே (106). கடற்படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
தினந்தோறும் கொஞ்சம் பிராந்தியும் கொஞ்சம் பை-யும் (காய்கறிகள், பழங்கள் அல்லது இறைச்சி சேர்ந்த உணவு வகை) உண்பது தான் தனது நீண்ட ஆயுளுக்கான சீக்ரெட் என்கிறார்.
சமீபத்தில் 106-வது பிறந்த நாளைக் கொண்டாடிய இவருக்கு மேபெல்(79) என்ற மகளும், இரண்டு பேரக்குழந்தைகளும், மூன்று கொள்ளுப் பேரக்குழந்தைகளும் உள்ளனர்.
இவர்களுடன் சேர்ந்து இனிமையாக வாழ்க்கையை கழிக்கும் இவரின் மனைவி மேரி பதிமூன்று ஆண்டுகளுக்கு முன் காலமானார்.
எட்டு வயதிலிருந்து தனது ஊரில் உள்ள பேக்கரி கடையின் பை-யை உண்ணும் அவர், அவர்கள் செய்யும் பிராந்தி கலந்த பை-யின் பிரியர். தினமும் அந்த கடையில் உண்ணாமல் இருக்க மாட்டார்.
எட்டு வயதில் வீடுகளுக்கு பால் போட துவங்கியவர், டுன்ஃபெர்மினின் கூட்டுறவு சங்கத்தில் சேர்ந்து வீட்டுக்கு வீடு காய்கறிகளை கொடுக்கும் பணி செய்தார்.
இரண்டாம் உலகப் போரில் கடற்படை பணியில் இருந்தவர் 1968 வரை பணியைத் தொடர்ந்தார். இரண்டு கைகளாலும் பேட்மிண்டன், கிரிக்கெட் விளையாடுவதில் வல்லவர்.
கால்பந்து விளையாட்டின் மீதும் இவருக்கு நாட்டம் அதிகம். இந்த சுறுசுறு தாத்தா தினந்தோறும் நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சியும் செய்துவருகிறார்.