உல்லாசத்திற்கு இடையூறு... கணவரைக் கொன்ற மனைவி

தனது கள்ளக்காதலுக்கு கணவர் பெரும் இடையூறாக இருந்து வந்ததாலும், அடிக்கடி கண்டித்ததாலும் கடுப்பான மனைவி, கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்று விட்டு, யாரோ கொன்னுட்டாங்க என்று நாடகமாடினார்.


கடைசியில் போலீஸார் உண்மையைக் கண்டுபிடித்து அப்பெண்மையும், கள்ளக்காதலனையும் கைது செய்தனர். மதுப் பழக்கம், கள்ளக்காதல் கொலைகள் மற்றும் பாலியல் பலாத்காரங்கள்.

நாடு முழுவதும் சமூகத்தை சீரழித்து வரும் பேரவலமாக இது மாறி வருகிறது. இதை ஒழிக்கவே முடியாது போலும். தினசரி இதுதொடர்பான செய்திகள் இடம்பெறாத ஊடகங்களே இல்லை.

இப்படித்தான் கிருஷ்ணகிரியில் ஒரு பெண் தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கட்டிய கணவரை கொடூரமாக கொலை செய்து விட்டு கூலாக போலீஸ் ஸ்டேஷனுக்கும் போய் யாரோ கொன்னுட்டாங்க எஜமான் என்று புகாரும் கொடுத்துள்ளார்.

கடைசியில் இருவரும் கைது செய்யப்பட்டு தற்போது களி தின்பதற்காக சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
Tags:
Privacy and cookie settings