டெல்லியில் இருந்து மேற்கு வங்கத்துக்கு புறப்பட்டுச் சென்ற ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.
டெல்லியில் இருந்து 115 பயணிகளுடன் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று மேற்குவங்கத்தில் உள்ள பக்தோகராவுக்கு புறப்பட்டுச் சென்றது. நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது விமானத்தின் ஹைட்ராலிக் அமைப்பில் திடீரென கோளாறு ஏற்பட்டது.
இதனை அறிந்த விமானிகள் மேற்கு வங்கத்தில் உள்ள என்.எஸ்.சி. போஸ் சர்வதேச முணையத்தில் விமானத்தை அவசரமாக தரையிறக்கினர்.
அங்கு மாற்று விமானம் மூலம் 115 பயணிகளும் பக்தோகராவுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். விமானியின் சாதுர்யத்தால் 115 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.