எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வை சொல்லும் புதிய படத்தை இயக்குநர் பிரியதர் ஷன் இயக்க வுள்ளார். இதில் நாயகனாக பிட்ஸா 2, தெகிடி படங்களில் நாயகனாக நடித்த அசோக் செல்வன் நடிக்க வுள்ளார்.
மேலும் பிரகாஷ் ராஜ், ஸ்ரேயா, நாசர் மற்றும் நாடக நடிகர்கள் சிலரும் இந்தப் படத்தில் நடிக் கின்றனர். படப்பிடிப்பு ஆகஸ்ட் 10-ஆம் தேதி சென்னையில் தொடங்கப் பட்டு, 20 நாட்களில் மொத்த படப் பிடிப்பையும் முடிக்க திட்ட மிடப்பட் டுள்ளது.
இந்த படம் குறித்து பேசியுள்ள இயக்குநர் பிரியதர்ஷன், "எய்ட்ஸ் பற்றிய ஆவணப் படம் எடுத்தால் அதைப் பார்க்க யாரும் வரமா ட்டார்கள்.
அதனால் ஒரு கதையை எடுத்து அதில் எய்ட்ஸ் விழிப்புணர்வை மையக்க ருவாக அமைத் துள்ளேன். காலை 9 மணியி லிருந்து மாலை 5 மணி வரை ஒரே நாளில் நடக்கும் சம்பவங்களே இந்தத் திரைப்படம்.
எட்டு வெவ்வேறு கதா பாத்திரங்கள் ரத்தப் பரிசோத னைக்காக ஒரு கூடத்துக்கு வருகின்றனர். அதிலிருந்து, மாலை 5 மணிக்கு அவர்களது பரிசோ தனை முடிவுகள் வரும் வரை கதை நடக்கிறது.
இது நகைச் சுவைப் படமாக இருக்கும் ஆனால் படம் முடியும்போது கண்டிப்பாக ரசிகர்கள் கண்ணீரோட வெளியேறு வார்கள்.
அப்படி ஒரு சிறிய திருப்பத்தை படத்தின் இறுதியில் வைத்து ள்ளேன்" என்றார். பிரியதர்ஷன், சில வருடங் களுக்கு முன் இந்தக் கதையை ஆமிர் கானை வைத்து இயக்கு வதாக இருந்தார்.
ஆனால் அது நடக்காமல் போனது. இந்தக் கதையைக் கேட்ட இயக்குநர் ஏ.எல்.விஜய் தானே தயாரிக்க முன் வந்துள்ளார். ஏ.எல்.விஜய் பிரியதர் ஷனின் சீடர் என்பது குறிப்பிட த்தக்கது.
ஏ.எல்.விஜய்யின் மனைவியும், நடிகையுமான அமலா பால், ஏ.எல். அழகப்ப னுடன் இணைந்து திங் பிக் ஸ்டூடியோஸ் சார்பில் இந்தப் படத்தை தயாரிக் கிறார்.
100 நிமிடங்கள் ஓடும் இந்தப் படத்தில் பாடல்கள் கிடையாது. படம் முடிவடை ந்தவுடன் இசைய மைப்பாளர் ஏ.ஆர்.ரஹ் மானுக்கு படத்தை திரையிட்டு, அவர் சம்மதிக்கும் பட்சத்தில், அவரே பின்னணி இசை அமைப்பார் என பிரியதர் ஷன் தெரிவித் துள்ளார்.
ஒளிப்பதிவை சந்தோஷ் சிவனும், கலை இயக்க த்தை சாபு சிரிலும் கவனித்துக் கொள் கின்றனர். மலையாள திரை யுலகில் புகழ்பெற்ற படத்தொகு ப்பாளர் பீனா பால் படத்தொகுப்பு செய்ய வுள்ளார்.
படத்தின் வெளியீட்டை இந்த வருடம் திட்ட மிட்டுள்ள இயக்குநர் பிரிய தர்ஷன், முதலில் சர்வதேச அளவில் படத்தின் முதல் பிரத்யேகக் காட்சியை திரையிட உள்ளார்.