தவறான தகவல்களை பரப்புகிறார்.. நடிகர் சங்கம் குற்றச்சாட்டு !

1 minute read
தேர்தல் பிரச்சாரத் துக்காக நடிகர் சங்க நிர்வாகம் பற்றி விஷால் தவறான தகவல்களை பரப்புவதாக நடிகர் சங்கம் குற்றம் சாட்டி யுள்ளது. இது தொடர்பாக நடிகர் சங்கம் சார்பில் அதன் துணைத் தலைவர்
கே.என்.காளை வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது: 

கடந்த 2006-ம் ஆண்டு நடிகர் சங்கத்தில் உறுப்பி னராக இணைந்த ஜே.கே.ரித்தீஷ், தனது சொந்த பணத்தில் நடிகர் சங்க உறுப் பினர்க ளுக்கு பல உதவி களைச் செய்துள்ளார். 

அந்த வகையில் சேலம் மாவட்ட நாடக நடிகர் சங்கத்துக்கு தனது சொந்த நிதியிலிருந்து ரூ.1.5 லட்சத்தை கடந்த 2007-ம் ஆண்டு வழங்கியுள்ளார். 

அதேபோல 2008-ம் ஆண்டு அனைத்து நடிகர் சங்க உறுப் பினர்களுக்கும் பொங்கல் பண் டிகையை முன்னிட்டு வேட்டி, சேலைகள் வழங் கினார். இதை நடிகர் சங்கம் சார்பாக எல்லா மாவட்ட நாடக நடிகர் சங்கங்களுக்கும் நாங்கள் சென்று வழங்கினோம். 

அந்த கால கட்டத்தில் பல நலிந்த நடிகர்களுக்கும் அவர்களின் குடும்பத்தி னருக்கும் கல்வி உதவித்தொகை, மருத்துவ உதவித் தொகை போன்ற வற்றை அவர் நேரடியாக வழங்கினார்.

தென்னிந்திய நடிகர் சங்க அறக்கட்ட ளைக்கோ, நடிகர் சங்கத் துக்கோ அவர் எந்த நிதியும் வழங்க வில்லை. நல்ல மனதோடு அவர் வழங்கிய அந்த உதவிகளை தேர்தல் பிரச்சாரத் துக்காக தற்போதைய நிர்வாகத்தின் தவறான செய்திகளை பரப்ப விஷால் பயன்படுத்துகிறார்.

இது கண்டிக்கத்தக்கது. அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப் பட்டுள்ளது. தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இருதரப்பிலும் கார சாரமாக குற்றம் சாட்டி வருவது திரையுலக வட்டாரத்தில் பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

நல்ல மனதோடு ஜே.கே.ரித்தீஷ் வழங்கிய அந்த உதவிகளை தேர்தல் பிரச்சாரத்துக்காக தற்போதைய நிர்வாகத்தின் தவறான செய்திகளை பரப்ப விஷால் பயன்படுத்துகிறார்.
Tags:
Today | 19, March 2025
Privacy and cookie settings