கோவை: ஆர்எம்கேவி நிறுவனம் சார்பில் பட்டு உற்பத்தியில் புதிய தொழில்நுட்பத்தை உள்ள டக்கிய நவீன நுமாட்டிக் கைத்தறிைய அறிமுகப் படுத்துகிறது.
இதன் மூலம் நெசவாளர்களின் உடல் உழைப்பை குறைக்க முடியும்.
மேலும், எலக்ட்ரானிக் ஜக்கார்ட் முறையை பயன்படுத்தி பழைய அட்டை முறையை தவிர்த்து எண்ணற்ற புதிய டிசைன்களையும் துரித உற்பத்தியையும் உருவாக்க முடியும்.
பொதுவாக பட்டு கைத்தறியை நெய்யும் போது கடின உழைப்பும், ஒன்றுக்கும் மேற்பட்ட பணியாளர்களும் இணைந்தே ஒரு தறியை இயக்க முடியும்.
ஒரு நெசவாளி தரையில் அமர்ந்தவாறு தனது கால்கள் மூலம் அதிக எடையுள்ள மரப்பெடல்களை தொடர்ந்து இயக்க வேண்டும்.
மிகச்சிறந்த நெசவாளுக்கு கூட நேர்த்தியான புடவையை நெய்வது என்பது அரிதான செயலாகும்.
இப்படிப்பட்ட பணிச்சுமை இளம் தலைமுறை நெசவாளர்களுக்கு அவர்களின் பணித்திறனை முடக்கி விடுகிறது.
இத்தகைய இடர்பாடுகளால் இளம் நெசவாளர்கள் இத்தொழிலை விட்டு மற்ற தொழிலுக்கு செல்வது அதிகரித்து வருவதும், இத்தொழில் நலிந்து வருவதும் வேதனைக் குரியதாகும்.
எனவே, மாற்றம் செய்யப்பட்ட தொழில் உக்தி, எளிைமப்படுத்தப்பட்ட உழைப்பின் மூலம் இத்தொழிலை மறுசீரமைப்பு
செய்யப்பட வேண்டும் என்ற எண்ணத்திலும் ஆர்எம்கேவி நுமாட்டிக் கைத்தறி எனும் புதிய தறியை அறிமுகப் படுத்துகிறது.
காற்றின் அழுத்தத்தை பயன்படுத்தி ஜக்கார்ட் பெட்டியை உந்துவதன் மூலமும், பெட்டியை இயக்குவது சாத்தியமாகும். எலக்ட்ரானிக் ஜக்கார்டை பயன்படுத்தியும் இத்தறியில் நெய்ய முடியும்.
இதனால் உழைப்பு, நேரம் மிச்சாவதுடன் எண்ணற்ற டிசைன்களையும் உருவாக்க முடியும். இதனால் பெண்களும் சிறு பயிற்சிக்கு பிறகு எளிதாக நெய்ய முடியும்.
இதன் மூலம் பெண்களும் பொருளாதார சக்தியை மேம்படுத்த வழிவகுக்கிறது.
ஆர்.எம்.கே.வியின் இந்த புதிய நுமாட்டிக் கைத்தறி வாடிக்கையாளர்கள் நலனையும் கருத்தில் கொண்டே உருவாக்கப் பட்டிருக்கிறது .
இதன் மூலம் வாடிக்கையாளர்களின் எண்ணங்களுக்கு ஏற்ப பல புதிய படைப்புகளை உருவாக்கி வாடிக்கையாளர் விருப்பங்களை நிறைவேற்ற முடியும்.
ஆர்.எம்.கே.வி இதற்கான பேட்டண்ட் உரிமைக்கு விண்ணப்பித் திருக்கிறது. இந்த தொழில் முறையை நாடு தழுவி
அத்துனை நெசவாளர்களுக்கும் கொண்டு செல்லும் பணியில் ஆர்எம்கேவி முனைப்புடன் செயலாற்றி வருகிறது.