இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் மறைவு இசை ஆர்வலர்களுக்கு பேரிழப்பு என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மோடி தனது ட்விட்டரில், "எம்.எஸ்.விஸ்வநாதனின் துரதிர்ஷ்டவசமான மறைவு இசை ஆர்வலர்களுக்கு பேரிழப்பு.
அவரது இசை எப்போதும் காலத்தை கடந்து நிற்கும். அவரது குடும்பத்தாருக்கும், இசை ஆர்வலர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ராஜ்யவர்த்தன் ரத்தோர் இரங்கல்:
மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சர் ராஜ்யவர்த்தன் சிங் ரத்தோர், இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் தனது ட்விட்டரில், "இசை மேதை எம்.எஸ்.விஸ்வநாதன் மறைவு வருத்தமளிக்கிறது. அவரது படைப்புகள் அவரை என்றும் மக்கள் மனதில் இருந்து நீங்காமல் வைத்திருக்கும்" எனக் குறிப்பி ட்டுள்ளார்.
பழம்பெரும் இசையமை ப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் இன்று (செவ்வாய்கிழமை) காலமானார்.
அவருக்கு வயது 87.
தமிழ் திரையுலகின் மெல்லிசை மன்னர் என்று அழைக்கப்படுவர் எம்.எஸ்.விஸ்வநாதன். எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது.
உடனடியாக தனியார் மருத்துவமனையில் அனுமதித்து, மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தார்கள். உடல்நிலை சீரானதைத் தொடர்ந்து வீட்டுக்கு அழைத்து செல்ல குடும்பத்தினர் முடிவு செய்த நேரத்தில், மீண்டும் எம்.எஸ்.விஸ்வாநனின் உடல்நிலை மோசம் அடைந்தது.
இந்நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி அதிகாலை 4:15 மணிக்கு அவருடைய உயிர் பிரிந்தது.