2002–ம் ஆண்டு குடிபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய வழக்கில் நடிகர் சல்மான் கானுக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.
மும்பை விசாரணை கோர்ட்டு இந்த தீர்ப்பை வழங்கியது. இதை எதிர்த்து அவர் மும்பை ஐகோர்ட்டில் அப்பீல் செய்துள்ளார். அவர் தற்போது ஜாமீனில் உள்ளார்.
இதற்கிடையே தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட யாகூப் மேமனுக்கு ஆதரவாக நடிகர் சல்மான்கான் கருத்து தெரிவித்து இருந்தார். அப்பாவியை கொல்வது மனிதநேயத்தை கொல்வதற்கு சமம் என்று டுவிட்டரில் கருத்து தெரிவித்து இருந்தார்.
தூக்கு தண்டனைக்கு எதிரான சல்மான்கானின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் அவருக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பா.ஜனதா, சிவசேனா ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. இதை தொடர்ந்து அவர் தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்டார்.
மும்பை பா.ஜனதா தலைவர் மராட்டிய கவர்னரை சந்தித்து சல்மான்கானின் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து இருந்தார். மேலும் சல்மான்கானின் ஜாமீனை ரத்து செய்ய கோரியும் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதோடு அவரது அப்பீல் வழக்கை மும்பையில் இருந்து டெல்லிக்கு மாற்ற வேண்டும் என்றும் கோரப்பட்டது. ஜாமீனை ரத்து செய்ய கோரும் இந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதற்கிடையே சல்மான் கானின் அப்பீல் வழக்கு விசாரணை மும்பை ஐகோர்ட்டில் வருகிற 30–ந்தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.