இருப்பது இனோவா, பிடித்தது மினி கூப்பர்!- நடிகர் விதார்த்

0 minute read
அண்ணன் அஜீத் வைத்திருப்பதால் நானும் இனோவா கார் வைத்திருக்கிறேன். முடிந்தவரை எனது படப்பிடிப்பு எந்த ஊரில் இருந்தாலும் காரில்தான் போவேன். ஏனென்றால் பலதரப்பட்ட மனிதர்களைப் பார்க்க முடியும். 

 

அவர்களுடைய வாழ்க்கை முறை உள்ளிட்ட விஷயங்களை அறிந்து கொள்வேன். நிறைய இடங்களுக்கு காரிலேயே எனது பயணம் இருக்கும். காரில் பயணிப்பது என்பது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. 

காரில் ஏறியவுடன் என்னை நானே மறந்துவிடுவேன். பிடித்த பாடல்களை போட்டுக் கொண்டு, ஏ.சி. எல்லாம் போடாமல் காரில் பயணிக்கும் சுகம் இருக்கிறதே. அதை எல்லாம் சொன்னால் தெரியாது, அனுபவிக்கும் போது தான் தெரியும். 

 

படப்பிடிப்பு இல்லைன்னா வண்டியை எடுத்துகிட்டு பேசாமல் போய்கிட்டே இருப்பேன். எங்கே போறோம் என்று எனக்கே தெரியாது.

எனக்கு பிடித்த கார் என்றால் மினி கூப்பர் தான். அதையும் விரைவில் வாங்கிவிடுவேன். எனது மனதுக்கு ரொம்ப நெருக்கமான விஷயங்களில் ஒன்று கார்.
Tags:
Privacy and cookie settings