ராஜேஷ் இயக்கத்தில் நடித்துவரும் 'தூங்காவனம்' படத்தை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்துக்கு அளிக்க கமல் திட்டமிட்டு இருக்கிறார்.
கமல், த்ரிஷா, பிரகாஷ்ராஜ், ஆஷா சரத் உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் 'தூங்காவனம்'. ஜிப்ரான் இசை யமைத்து வரும் இப்படத்தை கமலிடம் இணை இயக் குநராக பணி யாற்றிய ராஜேஷ் இயக்கி வருகிறார். ராஜ்கமல் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது.
'தூங்காவனம்' ஒரே சமயத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிக ளிலும் தயாராகி வருகிறது. ஹைதரா பாத்தில் தொடங்கப் பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னை ஈ.சி.ஆரில் அரங்குகள் அமைக்க ப்பட்டு நடைபெற்று வருகிறது.
இப்படத்தைத் தொடர்ந்து, திருப்பதி பிரதர்ஸ் நிறுவன த்துக்கு கையெழு த்திட்ட 30 கோடியில் முதல் பிரதி அடிப்ப டையிலான படத்தை துவங்க திட்ட மிட்டு இருந்தார் கமல்.
ஆனால், தற்போது 'தூங்காவனம்' படத்தை அளிக்கலாம் என்று திட்டமிட்டு இருக்கிறார். இது குறித்து "'தூங்காவனம்' படத்தின் படப்பிடிப்பு 90% முடி வடைந்து விட்டது.
இறுதிகட்ட படப்பிடிப்பு நடை பெற்று வருகிறது. 80 நாட்களில் மொத்த படப்பி டிப்பையும் நடத்தி முடிக்க திட்ட மிட்டோம், ஆனால் முன்பாக படம் முடிவடைந்து விடும் என நினை க்கிறேன்.
மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்த உடன் படத்தின் செலவு கணக்கிட்டு விட்டு, திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்துக்கு அளிக்கலாம் என்று கமல் சார் திட்டமிட்டு இருக்கிறார்" என்று படக்குழுவில் பணியாற்றுபவர் தெரிவித்தார்.
'தூங்காவனம்' படத்தை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்துக்கு அளித்துவிட்டால், கமலின் அடுத்த படமாக 'தலைவன் இருக்கின்றான்' தயாராக இருக்கிறது. தமிழ் மற்றும் இந்தியில் இப்படம் தயாராக இருப்பது குறிப்பிடத்தக்கது.