சென்னை மெட்ரோ ரெயிலில் பயணிக்க வெளியூர் சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.
மெட்ரோ ரெயில்
சென்னை நகரின் புதிய அடையாளமான மெட்ரோ ரெயில் சேவை கடந்த மாதம் 29-ந்தேதி கோயம்பேடு-ஆலந்தூர் இடையே தொடங்கியது. இதில், பயணம் செய்வதற்கான கட்டணம் அதிகம் என்பதால் சராசரி பயணிகள் இதில் பயணம் செய்வதற்கு சற்று தயக்கம் காட்டி வருகின்றனர்.
‘குளுகுளு’ வசதி, சென்னை நகரின் அழகை ரசித்தப்படி விரைவான பயணம் போன்ற காரணங்களால் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்வதற்கு சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
சென்னைவாசிகள் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகளும் மெட்ரோ ரெயில் மோகத்தால் தற்போது ஈர்க்கப்பட்டுள்ளனர். இதனால் வெளியூரை சேர்ந்த சுற்றுலா பயணிகள் சென்னைக்கு வருகை புரிகின்றனர்.
கூட்டம் குறைந்தது
மெட்ரோ ரெயில் சேவை தொடங்கிய பின்னர் முதல் விடுமுறை நாளான கடந்த 5-ந்தேதி, அதில், பயணம் செய்வதற்கான கூட்டம் அலைமோதியது. ரெயில் நிலையங்களில் நிற்க முடியாத அளவுக்கு கூட்டம் நிரம்பி வழிந்தது.
இந்தநிலையில் 2-வது விடுமுறை நாளான நேற்று கடந்த வாரத்தை காட்டிலும் பயணிகள் கூட்டம் சற்று குறைந்தே காணப்பட்டது.
முதல்முறையாக மெட்ரோ ரெயிலில் பயணம் செய்தவர்கள் பலரும் நேற்று செல்போன் மூலம் ‘செல்பி’ படம் பிடித்து மகிழ்ந்தனர்.