பிரான்ஸ் நாட்டில் துப்பாக்கியில் குண்டு இருப்பது தெரியாமல் தனது சகோதரனை விளையாட்டாக சுட்டதில் சிறுவன் ஒருவன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸ் நாட்டில் உள்ள Vosges என்ற நகருக்கு அருகில் உள்ள Hennezel என்ற ஒரு சிறிய கிராமத்தில் 14 வயது இரட்டையர் மகன்களுடன் பெற்றோர்கள் வசித்து வந்துள்ளனர்.
குடும்பத்தில் உள்ள நபர் ஒருவர், கைதுப்பாக்கிகள் சிலவற்றை வாங்கி வந்து வீட்டில் உள்ள ஒரு மேசையில் வைத்துள்ளார்.
அந்த துப்பாக்கிகளில் ஒன்றில் குண்டுகள் நிரப்பப்பட்டு இருந்ததை சிறுவர்களிடம் முன்கூட்டியே சொல்லி எச்சரிக்கை செய்யவில்லை என தெரிகிறது.
இந்நிலையில் நேற்று இரவு 10.30 மணியளவில், குடும்பத்தினர் அனைவரும் இரவு உணவு உண்பதற்காக தயாராகி கொண்டிருந்துள்ளனர்.
அதே வேளையில், மேசையில் வைக்கப்பட்டிருந்த துப்பாக்கிகளை எடுத்து சிறுவர்கள் இருவரும் விளையாடிக்கொண்டு இருந்துள்ளனர்.
இரண்டு பேரில் ஒருவன் ஒரு துப்பாக்கியை விளையாட்டாக எடுத்து தனது சகோதரனை நோக்கி சுட்டுள்ளான்.
துப்பாக்கியில் குண்டு நிரப்பி இருந்ததை தெரியாததால், அதிலிருந்து வெளிப்பட்ட குண்டு ஒன்று, தனது சகோதரனின் மார்பை துளைத்துள்ளது.
குண்டடிப்பட்டு ரத்த வெள்ளத்தில் துடித்த சிறுவனை, தீயணைப்பு படை வீரர்கள் வந்து முதலுதவி செய்தும் சிறுவனின் உயிரை காப்பாற்ற முடியவில்லை.
சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார், பெற்றோர்களிடம் விசாரணை நடத்தினர். ஆனால், இந்த சம்பவம் தொடர்பாக யாரையும் இன்னும் கைது செய்யப்படவில்லை.
பிரான்ஸ் நாட்டில் துப்பாக்கிகளை சொந்தமாக வைத்துக் கொள்ள அரசு உரிமம் வழங்கி வருவதால், தற்போதைய புள்ளி விபரத்தின்படி, பிரான்ஸ் நாட்டில் சுமார் 7.5 பில்லியன் நபர்களிடம் துப்பாக்கிகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.