ஜப்பானில் அதிவேகமாக சென்று கொண்டிருந்த புல்லட் ரயிலில் பயணி ஒருவர் திடீரென தன் உடலில் தீ வைத்துக் கொண்டார். இந்த சம்பவத்தில் அந்த ஆணும் மற்றும் மற்றொரு பெண்ணும் பலியானார்கள்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோ விலிருந்து ஒசாகா வரை செல்லும் அந்த புல்லட் ரயிலில் ஆண் பயணி ஒருவர் தான் கொண்டு வந்திருந்த எரிபொருளை தன்னுடைய தலை யில் ஊற்றி தீ வைத்துக் கொண் டுள்ளார்.
குளிர் சாதன வசதி உடைய ரயிலின் கதவுகள் அனைத்தும் மூடப் பட்டிருந்ததால் மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆபத்து காலத்தில் இயக்க வேண்டிய பட்டனை அழுத்தி ரயிலை நிறுத்தியுள்ளனர். இதற்குள்ளாகவே பல பயணிகள் மயங்கி விழுந்து விட்டனர்.
இதில் 9 பேர் காயம் அடைந்தனர். இதில் தீ வைத்துக்கொண்ட ஆண் பயணியும் ஒரு பெண்ணும் உயிரிழந்து விட்டனர். இந்த சம்பவத்தால் டோக்கியோ - ஒசாகா இடையிலான ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.