ராஜஸ்தானில் 35 வயது கவுன்சிலர் ஒருவர் 6 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் சிட்டோகர் மாவட்டத்தில் உள்ள கங்கரார் கிராமத்தைச் சேர்ந்த ரதன் ஜாட்(35), பஞ்சாயத்து போர்டு உறுப்பினராக இருக்கிறார்.
இந்த வார தொடக்கத்தில் பந்தோலி அல்லது சோனியானா கிராமத்தில் வைத்து இருவருக்கும் 6 வயது சிறுமி ஒருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.
திருமணம் நடைபெற்ற பிறகு இரு வீட்டாரும் அந்த கிராமத்தை விட்டு வெளியேறிவிட்டனர். ஆனால் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வாட்ஸ்-ஆப்பில் பரவியுள்ளன.
இதன் மூலம் குழந்தை திருமணம் நடந்துள்ளதை உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக ரதன் ஜாட் மீது வழக்குப் பதிவு செய்ய கங்கரார் போலீசாருக்கு உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இந்த திருமணம் பற்றி கிராமத்தாரிடம் கேட்டால் யாரும் எந்த தகவலையும் தெரிவிக்க மறுக்கிறார்கள் என்றும், இந்த திருமணத்தை ரத்து செய்ய நாளை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்படும் எனவும் மாவட்ட கலெக்டர் வேத் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.