இந்தியப் பெருங்கடலில் சீன நீர்மூழ்கிக் கப்பல்கள் !

கடற்கொள்ளைச் சம்பவங் களைத் தடுக்கவே, இந்தியப் பெருங்கடலில் சீன நீர்மூழ்கிக் கப்பல்கள் நிலை நிறுத்தப் பட்டுள்ளன. 
இந்தியப் பெருங்கடலில் சீன நீர்மூழ்கிக் கப்பல்கள்  !
அதனால் இந்தியாவின் பாதுகாப்புக்கு எந்தவித அச்சுறுத்தலும் ஏற் படாது என்று சீன ராணுவம் தெரிவித் துள்ளது.

இது குறித்து ஷாங்காய் கப்பல் படைத் தளத்தின் தளபதி வெய்சியான்டாங் செய்தியாளர் களிடையே கூறியதாவது: 

மற்ற கப்பல்களோடு கடற் கொள்ளைச் சம்பவங் களைத் தடுப்பதில் நீர்மூழ்கிக் கப்பல் களும் செயலாற்றும். எதிர்காலத்தில் சீன மற்றும் இந்திய கப்பல் படைகள் கடல்சார் பாதுகாப்பை உறுதி செய்ய இணைந்து பணி யாற்றும்.

இந்நிலையில், இந்திய கடல் எல்லையைச் சுற்றி வளைக்கும் விதமாக சீனா தனது கப்பல் படை கப்பல்களை நிலை நிறுத்தி யுள்ளது என்று கூறுவது தவறான கருத்தாகும். 
நாங்கள் இவ்வாறு கப்பல் களை நிலை நிறுத்துவதன் மூலம் மற்ற நாடுகளை அச்சுறுத் துவது இல்லை. 

சீன கப்பல்படை யுடன் சேர்ந்து இந்திய கப்பல் படையும் இணைந்து ராணுவப் பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்று நாங்கள் விரும்பு கிறோம். இவ்வாறு அவர் கூறினார். 

இந்தியா தவிர, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், மாலத் தீவுகள் மற்றும் சோமாலியா ஆகியவற்றின் கடல் எல்லைகளிலும் 

சீனா தனது கப்பல் களை நிலை நிறுத்தியி ருப்பது பெரும் விமர்ச னத்துக்கு உள்ளாகி வருவது குறிப்பிடத் தக்கது.
Tags:
Privacy and cookie settings