முதல்–அமைச்சர் ஜெயலலிதா வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: திருநெல்வேலி மாவட்டம், குருக்கள்பட்டி கிராம பிரதான சாலையில், 2.5.2015 அன்று சங்கரன் கோவிலி லிருந்து திருநெல்வேலி சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து
எதிரே வந்த வேன் மீது மோதியதில் வேனில் பயணம் செய்த விருதுநகர் மாவட்டம், சொக்கன்நாதன்புதூரைச் சேர்ந்த சோலைமலை என்பவரின் மனைவி செல்வி, நடராஜன் என்பவரின் மனைவி செல்வவடிவு;
உசிலம்பட்டியைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவரின் மனைவி சாந்தி, அவருடைய குழந்தை கார்த்திகேயன் திருநெல்வேலி மாவட்டம், வடமலை சமுத்திரம்,
அகஸ்தியர்புரத்தைச் சேர்ந்த பிரான்சிஸ் என்பவரின் மகன் ஞானசேகர் ஆகியோர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
அகஸ்தியர்புரத்தைச் சேர்ந்த பிரான்சிஸ் என்பவரின் மகன் ஞானசேகர் ஆகியோர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
நான்கு நபர்கள் பலத்த காயமடைந்தனர் என்ற செய்தியை அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன்.
இந்த சாலை விபத்தில் உயிரிழந் தவர்களின் குடும்ப ங்களுக்கு தலா மூன்று லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந் தவர்களுக்கு தலா 50,000 ரூபாயும் முதல்– அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தர விட்டுள்ளேன்.
திருநெல்வேலி மாவட்டம், குலையனேரி கிராமத்தைச் சேர்ந்த தங்கையா என்பவரின் மனைவி குருவம்மாள்; திருவாரூர் மாவட்டம், எழிலூர் கிராமத்தைச் சேர்ந்த பொன்னுசாமி என்பவரின் மகன் வெள்ளைச்சாமி;
கடலூர் மாவட்டம், போத்திரமங்கலம் மேற்கு கிராமத்தைச் சேர்ந்த செல்லமுத்து என்பவரின் மகன் மாயவேல்;
இராமநாதபுரம் மாவட்டம், ஏ.நெடுங்குளம் கிராமத்தைச் சேர்ந்த பச்சைமால் என்பவரின் மனைவி இந்திரா, தேவராஜ் என்பவரின் மனைவி அனுராதா;
புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் வட்டம், வத்தனாகோட்டை கிராமத்தைச் சேர்ந்த பழனிவேல் என்பவரின் மனைவி கலைமணி; ஆகியோர் இடி, மின்னல் தாக்கியதால் உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.
இந்தத் துயரச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்– அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.