ஊட்டி பங்களாவில் முதியவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஓரினச் சேர்க்கையின் போது துன்புறுத்தியதால் கொன்றதாக கைதான வாலிபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஊட்டி நொண்டி மேட்டில் தொழில் அதிபர்கள், சினிமா பிரமுகர்களின் சொகுசு பங்களாக்கள் உள்ளன. சீசனுக்கு மட்டுமே உரிமையாளர் வந்து செல்வார்கள். அதற்கு பின்னர் காவலாளிகள் தான் பங்களாக்களை பராமரித்து வருவார்கள்.
கடந்த 18.2.2015 அன்று தொழில் அதிபரின் பங்களாவில் காவலாளியாக இருந்த சந்திரசேகரன் (வயது 70) என்பவர் தலையில் பலத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார்.
இது குறித்து ஊட்டி நகர் மத்திய போலீசார் வழக்குப்பதிவு செய்து முக்கிய தடயங்களை சேகரித்தனர். நீலகிரி போலீஸ் சூப்பிரண்டு சந்திரகுமார் தலைமையில் கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப் பட்டது.
இன்ஸ்பெக்டர் விநாயகம் தலைமையிலான போலீசார் குற்றவாளியை கைது செய்தனர். விசாரணையில் அவர் அதே பகுதியில் உள்ள சினிமா பிரமுகர் பங்களாவில் காவலாளியாக உள்ள மதன் என்ற மணிகண்டன் (32) என்பது தெரியவந்தது.
போலீசில் மணிகண்டன் வாக்குமூலத்தில் கூறியதாவது: நானும், சந்திரசேகரும் மது அருந்தி விட்டு ஆபாச படம் பார்ப்போம்.
அதன் பின்னர் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவோம். நீண்ட நாட்களாக இந்த பழக்கம் இருந்தது. சம்பவத்தன்று நாங்கள் இருவரும் மது அருந்தினோம்.
அதன்பின்னர் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டோம். அப்போது முதியவர் சந்திரசேகர் எனது உயிர்நாடியை பிடித்ததில் அதிக வலி ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த நான் அருகில் கிடந்த மதுபாட்டிலால் அவரது தலையில் அடித்தேன். இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிர் இழந்தார்.
அதன் பின்னர் தப்பி விட்டேன். 4 மாதங்களுக்கு பின்னர் போலீசார் என்னை பிடித்து விட்டனர். இவ்வாறு அவர் கூறினார். இதனை யடுத்து மணி கண்டனை போலீசார் சிறையில் அடைத்தனர்.