கோவை மாவட்டத்தில் லாரியில் ஏற்றி வரும் மாடுகளுக்கு ஏற்பட்டுள்ள கெடுபிடியை கண்டித்து மாவட்டத்தில் 335 மாட்டிறைச்சி கடைகள் நேற்று மூடப்பட்டது. மாநிலம் முழுவதும் ஏராளமான மாட்டு சந்தைகள் உள்ளன.
இங்கு விவசாயிகள் விற்க கொண்டு வரும் மாடுகளை தமிழ் நாடு மாட்டு வியாபாரிகள் வாங்கி லாரிகளில் கொண்டு செல்கின்றனர்.
சமீபகாலமாக லாரிகளில் கொண்டு செல்லும் மாடுகளை போலீசார் பறிமுதல் செய்து அபராதம் விதிப்பதுடன், சில மாடுகளை கோசாலைக்கு அனுப்பி வைக்கின்றனர்.
பறிமுதல் செய்த மாடுகளை திரும்ப பெற கோர்ட் உத்தரவை பெற்றும் வியாபாரிகளுக்கு கோசாலையினர் திருப்பி கொடுக்க மறுப்பு தெரிவித்து வருகின்றனர். இதை தொடர்ந்து, தமிழ்நாடு மாட்டு வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தினர் மாட்டு வியாபாரத்தை நிறுத்தியுள்ளனர்.
இதற்கு கொங்கு மாவட்ட மாட்டு இறைச்சி வியாபாரிகள் சங்கத்தினர் ஆதரவு தெரிவித்து நேற்று முதல் வரும் 29ம் தேதி வரை மாட்டுறைச்சி கடையை மூடி போராட்டத்தில் ஈடுபட்டுள்னளர்.
கோவை மாவட்டத்தில் 335 மாட்டுறைச்சி கடைகள் நேற்று மூடப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட மாடுகளை திருப்பி கொடுக்க வேண்டும், மாட்டிறைச்சி வியாபாரத்திற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி கடையடைப்பு செய்துள்ளனர்.
இது தொடர்பாக வரும் 29ம் தேதி சென்னை சேப்பாகத்தில் உள்ள விருந்தினர் மாளிகை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக கொங்கு மண்டல மாட்டிறைச்சி வியாபாரிகள் சங்க தலைவர் நிம்மிதி இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
மேலும், மாட்டிறைச்சி விவகாரம் தொடர்பாக கோவை மாவட்ட கலெக்டரிடமும் மனு அளித்துள்ளனர்.