பயணிகள் விமானமொன்று தரையிலிருந்து ஏறத்தாழ செங்குத்தாக கிளம்பிச் சென்ற சம்பவம் அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தில் அண்மையில் இடம் பெற்றது.
போயிங் நிறுவனத்தினால் தயாரிக்கப்படும் 787 - 9 ட்ரீம்லைனர் எனும் நவீன விமானமே சோதனைப் பறப்பின் போது இவ்வாறு செங்குத்தாக மேல்நோக்கி கிளம்பியது.
25 கோடி டொலர் (சுமார் 3,272 கோடி ரூபா) பெறுமதியான இவ்விமானத்தில் 280 பேர் பயணம் செய்ய முடியும்.
இதில் ஒரு தடவை எரிபொருள் நிரப்பினால் 12,800 கிலோ மீட்டர்கள் தூரம் பயணம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை 30 வாடிக்கையாளர் களிடமிருந்து இந்த ரகத்திலான 509 விமானங்களை வாங்குவதற்கான கட்டளைகள் கிடைத்துள்ளதாக போயிங் நிறுவனம் தெரிவித்துள்ளது.