தமிழ்நாடு DIG யின் உத்தரவை வெளியேறினார் அர்ஹம் மௌலவி !

ரமலான் பிறை ஒன்றுமுதல் அதிரை தாருத் தவ்ஹீத் ADT சார்பில் நடுத்தெரு தனியாருக்கு சொந்தமான இடத்தில் இரவு 10:30 முதல் 11:00 மணிவரை சிறப்பு உரையை இலங்கையிலிருந்து வந்த அர்ஹம் என்பவர் நடத்திவந்தார் .
Arham-2
இதனை ஒரு அமைப்பினர் சென்னை DIG அலுவகலம் வாயிலாக புகார் அளித்துள்ளனர். அதில் இலங்கையிலிருந்து விசிட் விசாவில் வந்த அர்ஹம் என்பவர் குறிப்பிட்ட அந்த இடத்தில் உரையாற்றுகிறார். 

இது அப்பகுதி வாசிகளுக்கே பிடிக்கவில்லை என்றும் இதனை உடனே தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர். இதனை அடுத்து காக்கிகள் அர்ஹமை அணுகிய காக்கிகள் விசாரணைக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர் அப்பொழுது…


நான் பிழைப்புக்காக ஒன்னும் வரவில்லை… எனக்கு ஹாட்டுல கொஞ்சம் பிரச்னை ஈக்கிது… அதுக்காகத்தான் வந்தேன் அதோடு இஸ்லாமிய பிரசாரம் செய்தால் கொஞ்சம் நல்லதுதானே ன்னு செஞ்சேன் இதுல என்ன தப்பா ஈகீது? என போலீசாரிடமே கேள்வியை கேட்க…

நான் என்ன பண்ணுறது பாய் … எல்லாம் உங்க ஆளுங்க தானே பெட்டிஷன கொண்டு போயி DIGயிடம் கொடுத்து இருக்காங்க என்ற காக்கிகள் தாங்கள் உடனடியாக நாடு திரும்பவேண்டும் எனவும் கட்டளையிட்டுள்ளனர் .

இந்நிலையில் அர்ஹமின் இறுதி உரை நேற்று மேற்கண்ட வளாகத்தில் நடைபெற்றது. இதில் கண்ணீருடன் அர்ஹம் வெளியேறினார்.
Tags:
Privacy and cookie settings