பஸ்சில் ஹெல்மெட் அனுப்ப ரூ.200 வசூல் !

ஹெல்மெட்'டுக்கு, பல இடங்களிலும் தட்டுப்பாடு ஏற்பட்டு ள்ளதால், கிடைக்கும் இடத்தில் வாங்கி, உறவினர்கள், நண்பர் களுக்கு, பஸ்களில் கொடுத்த னுப்பினால், அதற்கு, கண்டக்டர்கள், 200 ரூபாய் வசூலிக் கின்றனர்.
 
எந்த கணக்கில், இவ்வளவு பணம் வசூலிக்கிறனர் என தெரியாமல், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந் துள்ளனர். மாநிலம் முழுவதும், பெரும் பாலான கடைகளில், ஹெல் மெட்டுகள் விற்று தீர்ந்து விட்டன.

 இருக்கும் ஒருசில கடைகளில், கூட்டம் அலை மோதுகிறது. குறிப்பாக, கிராம மற்றும் சிறிய நகரங்களில், ஹெல்மெட்டுகள் கிடைக்க வில்லை.

இதனால், போலீசாரின் கெடுபிடியில் இருந்து தப்பிக்க, கிராம மற்றும் சிறிய நகரவாசிகள், பெரிய நகரங்களில் வசிக்கும் உறவினர்கள், நண்பர் களிடம், ஹெல்மெட் வாங்கி அனுப்புமாறு கூறு கின்றனர்.

இதனால், ஹெல்மெட் கிடைக்கும் இடங்களில், மொத்தமாக வாங்கி, நண்பர்கள், உறவினர் களுக்கு, பலரும் அனுப்பு கின்றனர். இதில், பெரும்பாலான ஹெல்மெ ட்டுகள், பஸ்களில் அனுப்பப் படுகின்றன.

சூழ்நிலையை உணர்ந்துள்ள கண்டக்டர்களும், வாய்ப்பை பயன்படுத்தி, ஹெல்மெட்டு களை எடுத்துச் செல்ல, தாறுமாறாக கட்டணம் வசூலிக்கின்றனர்.

திருப்பூரில் இருந்து, பொள்ளாச்சி, மேட்டுப் பாளையம்; திருப்பூரில் இருந்து, ஈரோடு மற்றும் கோவைக்கு, பஸ்சில் 'ஹெல்மெட்' அனுப்ப, கண்டக்டர்கள், 200 ரூபாய் கேட்கின்றனர்.

அரசு பஸ், தனியார் பஸ் இரண்டிலுமே, இந்த கட்டணம் தான்!கூரியர் நிறுவனங்கள், ஹெல்மெட்டை அனுப்புவ தில்லை. அவசர தேவை; வேறு வழியில்லை என கருதும் மக்கள், 200 ரூபாய் கொடுத்து பஸ்சில் அனுப்பு கின்றனர்.

பொதுமக்கள் கூறுகையில், 'உடனே சென்றயடைய வேண்டும் என்பதற்காக, பஸ்சில் ஆபீஸ் கவர், சிறிய பார்சல் அனுப்புவது வழக்கம். இதற்கு, 40 முதல், 80 ரூபாய் வரை வாங்குவர்.

'ஹெல்மெட்' அவசியம் என்பதால், இஷ்டத்துக்கு கேட்கின்றனர். எந்த கணக்கில், 200 ரூபாய் கேட்கின்றனர் என்றே தெரிய வில்லை' என புலம்புகின்றனர்.

கண்டக்டர்கள் மீது நடவடிக்கை!

அரசு போக்குவரத்து கழக உயரதிகாரிகள் தரப்பில் கேட்ட போது, 'பஸ்சில், எவ்விதமான பார்சல், இரும்பு பொருட்களை வாங்கிச் செல்லக் கூடாது என அறிவுறுத்தப் பட்டுள்ளது.

ஹெல்மெட்டை வாங்கிச்செல்வது தெரிய வந்தால், கண்டக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.
Tags:
Privacy and cookie settings