தூத்துக்குடியில் மாசிக்கருவாடு உற்பத்தி குறைந்து வருவதால் கிலோ ஆயிரத்துக்கு விற்பனை செய்யப் படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் மீன் பிடித்தொழில் முக்கிய மானதாக உள்ளதால்
இதன் சார்பு தொழில்களான மீன் உணவு உற்பத்தி, கருவாடு தயாரித்தல் உள்ளிட்ட தொழில்களும் சிறப்பாக நடக்கின்றன.

அசைவ உணவு பிரியர்களின் தேவையை பூர்த்தி செய்யவும், வருவாய்க்காகவும் தயாரிக்கப்படும் மாசிக் கருவாடு தொழிலில் இப்பகுதி மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
மன்னார் வளைகுடாவில் கிடைக்கும் சூரை மீன் இத்தொழிலுக்கு முக்கிய மூலதனமாக உள்ளது. இங்கு பிடிக்கப்படும் சூரை மீன்கள் கழுவி சுத்தம் செய்யப்பட்டு அதனுள் இருக்கும் குடல் உள்ளிட்டவை அகற்றப்படுகிறது.
பின்னர் அவற்றை நன்றாக அவித்து தண்ணீரை இறுத்தி ஒரு வாரம் முதல் 10 நாள் வரை வெயிலில் உலர்த்தப்படுகிறது. மீன்கள் பாறை போல் கடினத்தன்மைக்கு மாறும் வரை காய வைக்கப்பட்டு மாசிக்கருவாடு தயாரிக்கப்படுகிறது.
அதன் பிறகு பேக்கிங் செய்தோ, டின்களில் அடைத்தோ ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்போது சூரை மீன்பிடித்தொழில் நசிந்து வருவதால் மாசிக்கருவாடு உற்பத்தியும் நலிவை சந்தித்து வருகிறது.
தூத்துக்குடியிலிருந்து இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த மாசி கருவாடு தற்போது பெருமளவில் சரிவை சந்தித்துள்ளது. இங்கு தயாரிக்கப்படும் மாசி ஒரு கிலோவுக்கு ரூ.800 முதல் ரூ.1000 வரை விற்பனை செய்யப்படுகிறது.
மாசி கருவாடு தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டுள்ள சிலர் கூறுகையில், ‘தோணி தொழில் நலிவு, சூரை மீன்பாடு குறைவு உள்ளிட்ட காரணங்களினால் மாசி உற்பத்தி தொழில் பெரும் நலிவை சந்தித்து வருகிறது.
இத்தொழிலை நலிவிலிருந்து காப்பாற்ற சூரை மீன்கள் வளத்தை பெருக்குவதுடன் மாசி கருவாடு தயாரிப்பாளர்களுக்கு அரசு மானியம் உள்ளிட்ட சலுகைகளை வழங்க வேண்டும்’ என்றனர்.