துபாய் டிரைவிங் லைசென்ஸ் : 4 இந்திய மொழிகள் சேர்ப்பு !

1 minute read
துபாயில் டிரைவிங் லைசென்ஸ் பெறுவதற்கு நடத்தப்படும் தேர்வில், தமிழ் உள்பட 4 இந்திய மொழிகள் சேர்க்கப்பட்டுள்ளன. துபாயில் டிரைவிங் லைசென்ஸ் பெற விரும்புவோர்,

 துபாய் டிரைவிங் லைசென்ஸ் தேர்வில் தமிழ் உட்பட 4 இந்திய மொழிகள் சேர்ப்பு

முதலில் 30 நிமிடம் நடத்தப்படும் தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம். இந்த தேர்வு கணினி மூலமாக நடத்தப்படும். இந்த தேர்வை, துபாயின் சாலை மற்றும் போக்குவரத்து கழகம் (ஆர்டிஏ) நடத்தி வருகிறது.

இதனை, ஆங்கிலம், உருது, அரபி ஆகிய மூன்று மொழிகளில் மட்டுமே எழுத முடியும். இதனால், இந்தியாவை சேர்ந்த பலர், லைசென்ஸ் பெற வேண்டுமானால், பல முறை முயற்சி செய்ய வேண்டி இருந்தது.

இந்த நிலையில், புதிதாக 7 மொழிகளை சேர்க்க ஆர்டிஏ முடிவு செய்துள்ளது. இதன்படி, வரும் செப்டம்பர் மாதம் முதல், தமிழ், இந்தி, மலையாளம், பெங்காலி, சைனீஸ், ரஷியன், பெர்சியன் ஆகிய 7 மொழிகள் சேர்க்கப்படும்.

துபாய் அரசின் இந்த நடவடிக்கையால், மிக எளிதாக இந்தியர்கள் துபாய் டிரைவிங் லைெசன்சை பெற்று விடுவார்கள்.
Tags:
Today | 19, March 2025
Privacy and cookie settings