இமெயில் விவகாரத்தால் சர்ச்சையில் சிக்கிய ஹிலாரி !

அல் கொய்தா தீவிரவாதிகளுக்கு ஆதரவாக செயல்படும் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 
இமெயில் விவகாரத்தால் சர்ச்சையில் சிக்கிய ஹிலாரி !
முன்னாள் அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர், ஹிலாரி கிளிண்டனுக்கு இ-மெயில் அனுப்பியுள்ளது புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலராக ஹிலாரி இருந்த போது வெளியுறவுத் துறைக்கு அதிகாரப் பூர்வமாக வழங்கப்பட்ட 

இ-மெயில்களை தவிர்த்து விட்டு, தனது தனிப்பட்ட இ-மெயிலை ஹிலாரி பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனையடுத்து (2009 முதல் 2013 வரை) கால கட்டத்தில் ஹிலாரி அனுப்பிய இ-மெயில்கள், அவருக்கு வந்த இ-மெயில்களை வெளியிட அந்நாட்டு மத்திய நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து ஹிலாரி கிளிண்டனின் 3000 இ-மெயில்கள் பற்றிய விவரங்களை அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ளது.

அவ்வாறு வெளியிடப்பட்ட இ-மெயிலில் அப்போதைய அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் சாமுவேல் ரிச்சர்டு, வெளியுறவுத் துறை செயலராக இருந்த ஹிலாரி கிளிண்டனுக்கு இ-மெயில் ஒன்றை அனுப்பி இருந்தார். 
அதில் அல் கொய்தா தீவிரவாதிகளுக்கு ஆதரவாகச் செயல்படும் பாகிஸ்தான் ராணுவ தலைவர்கள் மீது ரகசியமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். 

இந்த இ-மெயில் விவகாரத்தால் தற்போது பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.
Tags:
Privacy and cookie settings