காலி குளிர்பான பாட்டில்களால் காஸா சிறுவர்கள் உருவாக்கிய படகு !

பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேலுக்கு இடையில் சிக்கிக் கொண்டு போர் இல்லாத வேளைகளில் பொழுது போகாத காஸா இளைஞர்களில் இருவர் ஒன்று சேர்ந்து புதிதாக ஏதாவது செய்தால் என்ன? 
காலி குளிர்பான பாட்டில்களால் காஸா சிறுவர்கள் உருவாக்கிய படகு !
என்று சிந்தித்ததன் விளைவாக சுமார் ஆயிரம் காலி குளிர்பான பாட்டில்களால் தயாரிக்கப்பட்ட சிறு படகு உருவாகியுள்ளது.

எலக்ட்ரீஷியனாக இருக்கும் பாஹா ஒபைட்(25) மற்றும் வக்கீலாக தொழில் செய்யும் மொஹமட் ஒபைட்(25) ஆகியோர் இந்தப் படகை தயாரித்துள்ளனர். 4 மீட்டர் நீளம், 2 மீட்டர் அகலம் கொண்ட இந்த படகை மீன் பிடிக்கவும்,

பொழுதுப் போக்காக கடலில் பயணிக்கவும் பயன்படுத்திவரும் இவர்கள் அந்தப் படகில் ஏறி காஸா கடற்கரை பகுதியில் அடிக்கடி ஆனந்த உலா வந்து கொண்டுள்ளனர்.
Tags:
Privacy and cookie settings