அரசு இ-சேவை மையம் மூலம் பிளாஸ்டிக் ஆதார் அட்டை !

அரசு இ-சேவை மையங்கள் மூலம் தமிழகத்தில் இதுவரை 14,891 பேருக்கு பிளாஸ்டிக் ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களில் அதிகமானவர்கள் பிளாஸ்டிக் ஆதார் அட்டை பெற்றுள்ளனர். 
 
தமிழகத்தில் தற்போது 80 சதவீதத் துக்கும் மேற்பட்ட வர்கள் ஆதார் அட்டை பெற்றுள்ளனர். தொடர்ந்து ஆதார் அட்டைகளை வழங்கு வதற்காக நிரந்தர மையங்கள் அமைக்க ப்பட்டு, விடுபட்டவர் களுக்கும் ஆதார் அட்டை வழங்க ப்பட்டு வருகிறது. 

தற்போது மத்திய அரசால் வழங்கப்பட்டு வரும் ஆதார் அட்டை, சாதாரண அட்டையால் ஆனது. தபால் மூலம் அனுப்பப்படும் அட்டைகள் சில நேரங்களில் கிழிந்துவிட வாய்ப்புள்ளது.

எனவே தமிழகத்தில் பிளாஸ்டிக் ஆதார் அட்டை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் இப்பணியை ஏற்றுள்ளது.

மத்திய அரசின் மின்னணு திட்டங்களை செயல்படுத்தும் ‘அப்னா சிஎஸ்சி’ நிறுவனத்துடன் இணைந்து தமிழ் நாடு அரசு கேபிள்டிவி நிறுவனம் இத்திட்டத்தை செயல்படுத்துகிறது.

இதன்படி, தமிழகம் முழுவ தும் சென்னை உள்ளிட்ட 32 மாவட்டங்களில் உள்ள 264 தாலுகாக்களில் உள்ள தமிழ்நாடு கேபிள் டிவி நிறுவனத்தால் தொடங்கப்பட்ட இ-சேவை மையங்களில் பிளாஸ்டிக் ஆதார் அட்டைகள் வழங்கப்படுகின்றன. 

கடந்த மார்ச் மாதம் கேபிள்டிவி நிறுவனத்தால் பணிகள் தொடங் கப்பட்டு, கடந்த 2 மாதங்களாக பிளாஸ்டிக் ஆதார் அட்டை வழங் கும் பணிகள் விரைவுபடுத்தப் பட்டுள்ளன. 

ரூ.30 செலவில் பிளாஸ்டிக் ஆதார் அட்டையை எங்கு வேண்டுமானாலும் பெறும் வசதியை தமிழ்நாடு கேபிள்டிவி நிறுவனம் செய்துள்ளது. சமீபத்திய நிலவரப்படி,

தமிழகத்தில் 14,891 பேர் பிளாஸ்டிக் ஆதார் அட்டை பெற்றுள்ளனர். இதில் தூத்துக்குடி (1,039 பேர்) , நெல்லை (1,037 பேர்) மாவட்டங்களில் அதிகமானவர்கள் பிளாஸ்டிக் ஆதார் அட்டை பெற்றுள்ளனர். 

ஆதார் அட்டையை தொடர்ந்து, பாஸ்போர்ட் பெறுவதற்கு விண்ணப்பிக்கும் பணியையும் அரசு கேபிள் டிவி நிறுவனம் தனது முகவர்கள் வாயிலாக செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. 

இது குறித்து கேபிள்டிவி நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பிளாஸ்டிக் ஆதார் அட்டை தயாரிப்பதற்கான நவீன இயந்திரத்தை மத்திய அரசு வழங்கியுள்ளது. 

அதிக விலை மதிப்புள்ள இந்த இயந்திரம், 264 தாலுகா அலுவலகங்களிலும் வைக்கப்பட்டு, இ-சேவை மையங்களில் நியமிக்கப் பட்டுள்ள கேபிள் டிவி முகவர்கள்

முதலில் தங்களுக்கான ஆதார் அட்டையை எடுத்து அதை காட்டி, மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி, பிளாஸ்டிக் ஆதார் அட்டையை வழங்கி வருகின்றனர்.

இந்த கார்டு பெற, மத்திய அரசுக்கு செலுத்தும் தொகையை இ-சேவை மையத்தில் உள்ள கேபிள் டிவி முகவர்கள் செலுத்திவிட்டு, மக்களிடம் இருந்து பெற்றுக் கொள்கின்றனர்.

பொதுமக்களிடம் பிளாஸ்டிக் ஆதார் கார்டு குறித்தும் பல வழிகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். 

அட்டை பெறுவது எப்படி? 
 
ஆதார் அட்டையை ஏற்கெனவே பெற்றவர்கள் இ-சேவை மையத்தில் ஆதார் அட்டை வழங்குபவரிடம் சென்று ஆதார் எண்ணை தெரிவித்து, அங்குள்ள இயந்திரத்தில் கருவிழி அல்லது விரல் ரேகையை பதிவு செய்தால், கணினி திரையில் ஆதார் கார்டு வரும். 

அந்த கார்டு தன்னுடையதுதான் என்பதை உறுதி செய்து ரூ.30-ஐ செலுத்தி கார்டை பெற்றுக்கொள்ளலாம்.

ஆதார் எண் உருவாக்கப்பட்டு இதுவரையில் கார்டு கிடைக்கப்பெறாதவர்கள் ரூ.40 செலுத்தி பிளாஸ்டிக் அட்டையை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அரசு கேபிள்டிவி நிறுவனத்தினர் தெரிவித்தனர். 
Tags:
Privacy and cookie settings