இங்கிலாந்து நாட்டின் தேசிய அளவிலான மக்கள் தொகை புள்ளிவிபரம் வெளியிடப்பட்டது. இதில் வெளிநாட்டை சேர்ந்தவர்களில் இந்தியர்களே அதிகம் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இங்கிலாந்தில் முன் எப்போதும் இல்லாத வகையில் சீனர்கள், அமெரிக்கர்களை விட இரண்டு மடங்கு இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
அங்கு வங்கதேசம், ஜெர்மன், அயர்லாந்து நாட்டை சேர்ந்தவர்களின் எண்ணிக்கையை விட பல மடங்கு இந்தியர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
2004-ம் ஆண்டு முதல் இப்போது வரையிலான கணக்கெடுப்பின்படி இங்கிலாந்தில் சுமார் 7.6 லட்சம் இந்தியர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.
இதற்கடுத்ததாக பாகிஸ்தானியர்கள் (5.16 லட்சம்) ஐயர்லாந்து நாட்டை சேர்ந்தவர்கள் (3.78 லட்சம்), ஜெர்மனி நாட்டை சேர்ந்தவர்கள் (2.97 லட்சம்), வங்காள தேசத்தை சேர்ந்தவர்கள் 2.28 லட்சம் பேரும் வாழ்ந்து வருகின்றனர்.
தற்போது இங்கிலாந்து நாட்டில் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த 2.2 லட்சம் பேரும், 1.97 லட்சம் அமெரிக்கர்களும், 1.91 லட்சம் சீனர்களும், 1.85 லட்சம் நைஜீரியர்களும் வாழ்ந்து வருவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
பிரிட்டன் பிரதமர் கடந்த 2010-ம் ஆண்டிற்கு பிறகு 3 முறை இந்தியாவுக்கு வந்திருப்பது இந்தியா-இங்கிலாந்து நாடுகளுக்கு இடையேயான உறவை வலுப்படுத்தி உள்ளதாக கருதப்படுகிறது.