இங்கிலாந்தில் வசிக்கும் வெளிநாட்டினரில் இந்தியர்கள் முதலிடம் !

இங்கிலாந்தில் வசிக்கும் வெளிநாட்டினரில் இந்தியர்கள் தான் தற்போது அதிகம் வசிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 இங்கிலாந்தில் வசிக்கும் வெளிநாட்டினரில் இந்தியர்கள் முதலிடம் !
இங்கிலாந்தில்  உள்ள தேசிய தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இங்கிலாந்தில் வசிக்கும் வெளிநாட்டினரில் தற்போது அதிகம் இந்தியர்கள்தான்  உள்ளனர்.

கடந்த 2004ம் ஆண்டில் இருந்து தற்போது அவர்களது விகிதாச்சாரம் 50 சதவீதம் அதிகரித்துள்ளது. தற்போது இங்கிலாந்தில் வசிக்கும்  இந்தியர்களின் எண்ணிக்கை மட்டும் 7.6 லட்சம் என தெரிய வந்துள்ளது.

மேலும் இந்தியர்களை தொடர்ந்து அதற்கு அடுத்த படியாக போலந்து  நாட்டுக்காரர்கள் 6.88 லட்சம், பாகிஸ்தானியர்கள் 5.16 லட்சம், அயர்லாந்துக்காரர்கள் 3.78 லட்சம், 

ஜெர்மனிக்காரர்கள் 2.97 லட்சம், வங்கதேசத்தவர் 2.28  லட்சம், அமெரிக்கர்கள் 1.97 லட்சம் மற்றும் சீனர்கள் 1.9 லட்சம் பேர் வசிக்கின்றனர் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது  வெளியான இந்த அறிக்கையின் மூலம் இந்தியர்களின் செல்வாக்கு மக்கள் தொகை மட்டுமின்றி இங்கிலாந்து அரசியலிலும் குறிப்பிடத்தக்க அளவுக்கு  தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதை முன்னிட்டே பிரதமர் டேவிட் கேமரூனும் தனது தேர்தல் பிரசாரத்தின் போது இந்தியர்கள் மத்தியில் கவனம் ெசலுத்தி அவர்களது  வாக்குகளை பெறுவதற்கும் முக்கியத்துவம் காட்டினார்.

2004 தொடங்கி 2013ம் ஆண்டு கால கட்டத்தில் தான் இங்கிலாந்து சமூகத்தில்  வெளிநாட்டினரின் தாக்கம் படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. 

இந்த கால கட்டத்தில் தான் வெளிநாட்டினரின் எண்ணிக்கை 26 லட்சத்துக்கும்  அதிகமாக அதிகரித்தது.

ஆனால் அதே காலகட்டத்தில் இங்கிலாந்துவாசிகளின் எண்ணிக்கை வெறும் 1.4 மில்லியன் மட்டுமே அதிகரித்துள்ளது.  

இதனால் 7 இங்கிலாந்துவாசிக்கு ஒரு வெளிநாட்டினர் என்கிற அளவுக்கு வெளிநாட்டினரின் எண்ணிக்கை தற்போது அங்கு அதிகரித்துள்ளது.
2004ல்  வெளிநாட்டில் பிறந்தவர்களின் எண்ணிக்கை 52.58 லட்சமாக காணப்பட்ட நிலையில் இங்கிலாந்தில் பிறந்தவர்களின் எண்ணிக்கை 5.39 கோடியாக  காணப்பட்டது. 

அதே நேரத்தில் 2013ம் ஆண்டு ெவளிநாடுகளில் பிறந்தவர்களின் எண்ணிக்கை 79.21 லட்சமாக காணப்பட்ட நிலையில் இங்கிலாந்தில்  அதே 5.53 கோடி என்ற அளவில் இருந்தது.

மக்கள் தொகையில் ஏற்பட்ட இந்த மாற்றம் இங்கிலாந்து அரசியலிலும் கடந்த ஆண்டு தாக்கத்தை ஏற்படுத்தியது. 

இதனால்  இங்கிலாந்து  நாடாளுமன்றத்திலும் வெளி இனத்தவரின் எம்பிக்களின் எண்ணிக்கையும் 42 ஆக உயர்ந்துள்ளது. 

கடந்த முறை 27 பேர் மட்டுமே எம்பிக்களாக  இருந்தனர். 2040ல் வெளிநாட்டினரின் எண்ணிக்கை தற்போது இருப்பதை விட இரு மடங்கு உயரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம்  இங்கிலாந்து மக்கள் தொகையில் வெளிநாட்டு மக்கள் தொகை மூன்றில் ஒரு பங்காக இருக்கும் எ ன அந்த புள்ளிவிவரத்தில் தெரியவந்துள்ளது. 

இதே  நிலை நீடித்தால் 2070ல் இங்கிலாந்தை சேர்ந்த வெள்ளையர்கள் சிறுபான்மையினராக மாறும் அபாயமும் உள்ளது என்றும் ஆக்ஸ்போர்ட்டு பேராசிரியர்  டேவிட் கோல்மென் எச்சரித்துள்ளார்.

இங்கிலாந்தில் நீண்ட காலமாக எம்பியாக பதவி வகித்து வரும் இந்திய வம்சாவளியைச் ேசர்ந்த கெயித் வாஸ் கூறுகையில்,

நிச்சயம் எனது  வாழ்நாளுக்குள் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் இங்கிலாந்தின் பிரதமராக வருவதற்கு வாய்ப்பு உள்ளது என்று நம்புகிறேன்.

இங்கிலாந்தில்  வசித்து வரும் வெளிநாட்டு வம்சாவளியினரில் இந்தியர்கள் மிகவும் கணிசமான அளவு நீண்ட காலமாக இங்கு வாழ்ந்து வருகின்றனர். 
இவர்கள்  ஏற்கனவே இங்கு அரசியலில் கணிசமான அளவு தாக்கத்தை ஏற்படுத்தி வருவதையும் கடந்த காலங்களில் நாம் பார்த்து வருகிறோம்.

எனவே இங்கிலாந்து - இந்திய தலைவர் ஒருவர் வெகு விரைவில் இங்கிலாந்தின் அரசியலில் பிரதமர் உள்ளிட்ட உயர் பதவிக்கு நிச்சயம் வருவார்  என்று எதிர்பார்க்கலாம் என்றார். 

ஏற்கனவே இதுகுறித்து டேவிட் கேமரூன் தனது பிரசாரத்தின் போது இங்கிலாந்துக்கு தனது கட்சி நிச்சயம் ஒரு  ஆசிய பிரதமரை அளிக்கும் என பேசியது குறிப்பிடத்தக்கது.
Tags:
Privacy and cookie settings