கனடாவில் கடந்த ஒரு வாரமாக பரவி வரும் காட்டுத் தீயால் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் இருப்பிட ங்களை விட்டு வெளியேறி யுள்ளனர்.
மத்திய கனடாவின் சாஸ்கட் சேவன் மாகாணத்தில் மட்டும் 118 இடங்களில் காட்டுத் தீ பற்றியுள்ளதாகவும் இதில் 20 இடங்களில் கட்டுப்படுத்த முடியாத அளவில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இங்கு தீயணைப்பு படையினர் உள்ளிட்ட 1,400 வீரர் களை அனுப்பியுள்ளதாக கனடா அரசு தெரிவிக்கிறது.
இங்குள்ள மக்களை பாதுகாப்பான இடங்க ளுக்கு அனுப்பும் பணி கடந்த ஒரு வாரமாக நடந்து வருகிறது.
இது வரை 13 ஆயிரத்துக்கும் மேற்பட் டோர், நூற்றுக்கணக்கான கி.மீட்ட ருக்கு அப்பால் உள்ள சமுதாயக் கூடங்களிலும் அண்டை மாகாண மான அல்பெர்ட்டாவிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அல்பெர்ட்டா, பிரிட்டிஷ் கொலம்பியா ஆகிய மாகாணங் களிலும் காட்டுத் தீ பரவி வருகிறது. அல்பெட்டாவில் கிட்டத்தட்ட 100 இடங்களில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பிரிட்டிஷ் கொலம்பியாவில் காட்டுத் தீ பற்றிய செய்தி சமீப காலத்தில் தொடர்ந்து வெளியாகிறது.
இங்கு ராக்கி மலைப் பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.
வான்கூவர் நகருக்கு வடக்கே 500 கி.மீ. தொலைவில் உள்ள பகுதியிலும் மக்களை வெளியேற் றும் பணி நடந்து வருகிறது.
வழக்கத்துக்கு மாறான வறட்சி மற்றும் அதிக வெப்பநிலையே காட்டுத் தீ ஏற்படுவதற்கு காரணமாக கூறப்படுகிறது. பருவநிலை மாறும் வரை இந்நிலை தொடரும் என அச்சம் தெரிவிக்கப் படுகிறது.