வேலூர் வனப் பகுதியில் முயல், நரி இறைச்சிகளை வேட்டையாடி புதிய பேருந்து நிலையத்தில் விற்பனை செய்ய முயன்ற இருவர் புதன்கிழமையன்று வனத்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
வேலூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் வன விலங்குகள் வேட்டையாடப்படுவதாக மாவட்ட வன பாதுகாவலர் கலாநிதிக்கு தொடர்ச்சியாக தகவல் வந்த வண்ணம் இருந்தது.
இதைத்தொடர்ந்து வன விலங்குகள் வேட்டையாடப்படுவதையும் முயல் உள்ளிட்ட வன விலங்கு கறிகள் விற்பனை செய்யப்படுவதையும் தடுக்க வன பாதுகாவலர்
கலாநிதி தலைமையில் வனச்சரகர்கள் சுப்பிரமணியன், ராஜா, வன ஊழியர் ஜான் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் வேலூர் பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் வேலூர் புதிய பேருந்து நிலையப் பகுதியில் இருவர் முயல் கறி, குள்ள நரித் தோல்களை விற்பனைக்காக பொதுமக்கள் பார்வைக்கு வைத்துள்ளதாக வனப் பாதுகாவலர் கலாநிதிக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து அவர் அலுவலர்களுடன் நேரடியாக புதிய பேருந்து நிலையத்திற்கு சென்று விற்பனையில் ஈடுபட்ட இருவரையும் விசாரித்தார்.
செய்யாறை அடுத்த மோரணம் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன், சுப்பிரமணி ஆகிய இவர்களிடம் இருந்து 3 குள்ள நரிகளின் தோல்கள், தலை, 8 முயல்களின் இறைச்சி ஆகியன பறிமுதல் செய்யப்பட்டன.
இவர்கள் செவ்வாய்க்கிழமை இரவு வனப் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று வேட்டையாடியது தெரியவந்ததை அடுத்து வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.
குள்ளநரிகளின் தோல் நல்ல விலை போவதாகவும், மருந்துக்கு பயன்படுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதனால் குள்ளநரிகள் தற்போது அழிந்து வரும் வன விலங்குகளில் ஒன்றாக உள்ளது. இவை அழிக்கப்பட்டு வருவதால் வனப் பகுதிகளில் காட்டுப் பன்றிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதுபற்றி மாவட்ட வன பாதுகாவலர், "குள்ள நரிகள் எண்ணிக்கை குறைவதால் காட்டுப்பன்றிகள், மான்களின் எண்ணிக்கை அதிகரித்து சம நிலை இல்லாத நிலை ஏற்படுகிறது. குள்ளநரிகள் எண்ணிக்கை சரியான அளவில் இருந்தால் அவை காட்டுப் பன்றிகள், மான்களை வேட்டையாடிவிடும். அப்போது வன விலங்குகளின் சம நிலையை உருவாக்கும்.
எனவே வன விலங்குகளை மனிதர்கள் வேட்டையாடாமல் இருப்பது நல்லது. அப்படி வேட்டையாடுவது குற்றச்செயல் ஆகும். வன விலங்குகளை வேட்டையாடுபவர்களை பிடிக்கும் நடவடிக்கை தொடரும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.