ஒருபால் உறவை சட்டபூர்வமாக்கும் பிரச்சாரத்தின் பகுதியாக, சீனாவின் முன்னணி ஒருபாலின பெண் தம்பதியர் சட்ட அங்கீகாரமற்ற முறையில் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
பீஜிங்கில் இருக்கும் ஒரு உணவு விடுதியில் நண்பர்கள் மற்றும் பத்திரிக்கை யாளர்கள் முன்பாக இந்த தம்பதியினர் திருமண உறுதி மொழிகளை எடுத்துக் கொண்டனர்.
ஒரு பாலின உறவு திருமணங்களை சீன அரசு அங்கீகரிப்ப தில்லை. அமெரிக்கா முழுவதும் ஒருபாலின உறவு திருமணங் களை அங்கீகரிக்க வேண்டும் என்று
அமெரிக்க உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பினால் தாங்கள் உத்வேகம் பெற்றதாக லீ டிங்டிங் மற்றும் தெரெஸா சூ என்ற இந்த பெண்கள் கூறியுள்ளனர்.