மன அழுத்தத்தின் மூலம் உடல் எடை எப்படி அதிகரிக்கிறது?

2 minute read
மன அழுத்தம் இன்றைய பரபரப்பான உலகில் மக்கள் எதிர் கொள்ளும் மிகவும் பொதுவான பிரச்சனை. மன அழுத்தமானது ஒருவரின் உடல் மற்றும் மன நிலையை மெதுவாக மற்றும் திட்ட வட்டமாக வீழ்ச்சி அடையச் செய்யும்.
மன அழுத்தத்தின் மூலம் உடல் எடை எப்படி அதிகரிக்கிறது?
இதில் இருக்கும் ஒரு சிக்கல் இது ஆரம்பத்தில் வெளியே தெரிவது இல்லை. தாமதமாகவே இதன் விளைவுகளை நாம் உணர முடியும்.  திடீரென்று நீங்கள் உங்கள் பழைய ஆடைகளில் பொருந்த இயலாமல் போகலாம். 

இந்த தலைவலி தொடர்ந்து நீங்கள் மாடிப்படி கூட ஏற முடியாமல் போகலாம். மன அழுத்தம் உடல் எடையை அதிகரிக்கும் என்பது புதிய கருத்து அல்ல. 

உடல் எடை அதிகரிப்பதை கட்டுப்படுத்த இயலாத காரணங்களில் மன அழுத்தம் ஒன்று.

ஒருவர் அதிக அளவு மன அழுத்தத்தில் இருக்கும் போது, அவர்கள் எடுத்துக் கொள்ளும் கலோரியை கணக்கிட இயலாது. இவ்வாறு நேரடியாக அதிக கலோரியை எடுத்துக் கொள்ளுவதால் உடல் எடை அதிகரிக்கும்.
வளர்சிதை மாற்றம் சுமூகமாக நடக்க மூன்று வேலை உணவு என்பது அவசியமானதாகும். ஒருவர் மன அழுத்தத்துடன் இருக்கும் போது இது பாதிக்கப் படும்.
காலையில் உணவை தவிர்த்து, அடுத்து மதிய வேலையில் அதிக உணவு எடுத்துக் கொள்ளும் போது உடல் பருமன் உண்டாகிறது.

உணவு வாஞ்சை யானது மன அழுத்தத்துடன் தொடர் புடையது. மன அழுத்தம் உள்ளவர்கள் விரக்தி, சலிப்பு மற்றும் அலுப்பு காரணமாக சிற்றுண்டி எடுத்துக் கொள்ள ஆரம்பி ப்பார்கள்.

இதனால் எவ்வளவு கலோரி ஒரு நாளைக்கு எடுத்து கொள்கிறார்கள் என்பது அவர்களுக்கு தெரியாது. இதன் விளைவு உடல் எடை அதிகரிப்பது ஆகும்.

மன அழுத்தம் மூளையுடன் தொட ர்புடையது மற்றும் அதிகம் யோசிப்பதால் பாதிக்கப் பட்டவரின் பயோமெட்ரிக் சுழற்சி மற்றும் தூங்கும் பழக் கத்தைப் பாதிக்கும்.

தூக்க மின்மை உடல் வாஞ்சையை ஏற்படுத்தி உடலில் உள்ள கார்டிசோல் நிலைகளை எழுச்சி அடைய செய்து, உடல் எடைக்கு வழிவகுக்கிறது.
மன அழுத்தத்தின் மூலம் உடல் எடை எப்படி அதிகரிக்கிறது?
மன அழுத்தத்தின் போது எடுத்துக் கொள்ளப்படும் காப்ஃபைன், மது, சிகரெட் போன்றவை உடலில் கார்டிசோல் நிலைகளை அதிகரிக்க செய்யும். 

இது நம் உடலில் கொழுப்பாக சேர்வதால், நம் உடலில் சரியாக கலோரியை எரிக்க முடியாமல் போகும்.

ஒருவர் மன அழுத்தத்தில் இருக்கும் போது நம் அட்ரினல் சுரப்பி வெளியிடும் ஹார்மோன் கார்டிசோல் ஆகும். இது குளுக்கோஸ் அளவை அதிகரித்து, வளர்சிதை மாற்றத்திற்கு அதிக ஆற்றலை அளிக்கிறது. 
அதே நேரம் இது உடலில் உள்ள கொழுப்பின் அளவையும், அதிகரிக்க செய்யும். மன அழுத்தம் கொண்டிருக்கும் மக்களுக்கு உள்ளுறுப்பு கொழுப்பு அளவு அதிகமாக உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. 
உள்ளுறுப்பு கொழுப்பு அடிவயிற்றில் சேமிக்கப்படும். உயர் உள்ளுறுப்பு கொழுப் பானது உடல் பருமன், இதய நோய்கள் மற்றும் பிற சுகாதார பிரச்சனை களை ஏற்படுத் துகிறது. 

ஒரு ஆரோக்கி யமான நபரின் இயல்பான கொழுப்பு சதவீதம் 1 முதல் 10 இடையே இருக்க வேண்டும்.
Tags:
Today | 14, March 2025
Privacy and cookie settings