தெரு விளக்கில் படிப்பதால் மாணவனுக்கு குவியும் உதவிகள் !

பிலிப்பைன்ஸ் நாட்டின் மாண்டேவ் நகரத்தில் வசிப்ப வர் கிறிஸ்டினா எஸ்பினோசா (42). இவருவுக்கு 9 வயதில் டேனியல் கேப்ரீரா என்ற மகன் உட்பட 3 பேர் உள்ளனர். 
தெரு விளக்கில் படிப்பதால் மாணவனுக்கு குவியும் உதவிகள் !
இவருடைய கணவர் இறந்து விட்டார். அதன் பிறகு தன் 3 குழந்தை களையும் கஷ்டப்பட்டு வளர்த்து வருகிறார். இவர் வேலை செய்யும் மளிகை கடைக்கு அருகில் மெக் டோனால்ட் கடை உள்ளது. 

வெளி யில் அலங்கார மின்விளக்கு எரியும். பள்ளி முடிந்து வரும் டேனியல், மாலையில் அங்கு படிக்க செல்வான்.

மெக்டோ னால்ட் கடை ஜன்னல் அருகில் மரத்தினாலான பெஞ்ச் இருக்கும். கடையின் மங்கலான விளக்கு வெளிச்சத்தில் டேனியல் படிப்பான். தவிர வீட்டு பாடங்க ளையும் அங்கு எழுதி முடிப்பான்.

கடந்த மாதம் அந்தப் பக்கமாக சென்ற கல்லூரி மாணவி ஜாய்ஸ் டொரீபிரான்கா என்பவர், டேனியல் வீட்டு பாடம் செய்யும் காட்சியைப் புகைப்படம் எடுத்து தனது முகநூலில் வெளியிட்டார்.
அந்தப் படத்தை 7000 முறை களுக்கு மேல் சமூக வலைதளங் களில் பகிரப்பட்டது. உடனடியாக டேனியலின் படிப்புக்கு உதவு பலர் முன் வந்தனர்.

பண உதவி, பள்ளி படிப்புக்கு தேவையான பொருட்கள், படிப் பதற்கு விளக்கு, ஊக்கத் தொகை என உதவிகள் வந்தவண்ணம் உள்ளன. 

மேலும் அருகில் உள்ள தேவாலயம் மற்றும் அரசு சமூக நலத் துறைக்கும் டேனியல் பெயருக்கு பல உதவிகள் வந்துள்ளன.
Tags:
Privacy and cookie settings