ரூ.200 ஆசைப்பட்டு ரூ.4.40 லட்சத்தை பறிகொடுத்த பரிதாபம் !

விழுப்புரத்தில் வங்கியில் இருந்து பணம் எடுத்து வந்தவரை நூதனமுறையில் திசை திருப்பி மர்ம நபர் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
விழுப்புரம் மாவட்டம் திருக்கோயிலுரை சேர்ந்த விவசாயி கோபால், தனது மகனின் மேற்படிப்பு செலவுக்காக விவசாய நிலத்தை விற்று அதன் மூலம் கிடைத்த பணத்தை திருக்கோயிலூர் இந்தியன் வங்கியில் சேமித்து வைத்திருந்துள்ளார்.

12ம் வகுப்பில், 1135 மதிபெண் பெற்ற கோபாலின் மகனுக்கு சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக்கத்தில் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதையடுத்து வங்கிக்கு 4.40லட்ச ரூபாயை எடுத்து கொண்டு வெளியே வந்த கோபால், தனது பைக்கின் முன்பக்க கவரில் பணத்தை வைத்த போது, அவர் அருகில் வந்த ஒரு நபர், ''கீழே உள்ள 200 ரூபாய் உங்களுடையதா?" என்று கேட்டுள்ளார்.

அப்போது கீழே குனிந்து அந்த பணத்தை எடுத்தபோது, கோபால் வண்டியில் வைத்திருந்த 4.40 லட்சம் பணத்தை மர்ம நபர் எடுத்து கொண்டு ஓடியுள்ளார்.
நடந்தது என்ன என்பது புரியாமல் விழித்த கோபால், பின்னர் “பணம், பணம்” என்று கூச்சல் போட்டுள்ளார். ஆனால் அந்த மர்ம நபர், வாகனத்தில் ஏறி தப்பி சென்றுள்ளார்.

இதையடுத்து இது தொடர்பாக திருக்கோயிலுர் பொலிசார், வழக்கு பதிவு செய்து மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.
Tags:
Privacy and cookie settings