21 குண்டுகள் முழங்க அப்துல் கலாம் உடல் நல்லடக்கம் !

1 minute read
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்திய பின்னர், 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
 
மாரடைப்பால் காலமான அப்துல்கலாம் உடல், அவரது சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. லட்சக்கணக்கானோர் அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

இன்று காலை ராமேஸ்வரம் பள்ளி வாசலில், அப்துல் கலாம் உடலுக்கு சிறப்பு தொழுகை நடைபெற்றது. பின்னர் அங்கிருந்து உடல் அடக்கம் செய்யப்படும் பேக்கரும்பு பகுதிக்கு ராணுவ வாகனத்தில் கலாம்  உடல் வந்தடைந்தது.

அங்கு, அப்துல்கலாம் உடலுக்கு ராணுவ மரியாதையுடன் பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதைத் தொடர்ந்து  காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அமைச்சர்கள் மனோகர் பாரிக்கர், வெங்கய்யா நாயுடு,

பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, பழனியப்பன், உதயகுமார் ஆகியோர் நீண்ட வரிசையில் நின்று இறுதி அஞ்சலி செலுத்தினர்..
மேலும், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, கர்நாடக முதல்வர் சித்தராமைய்யா, ஆந்திர முதல்வர் சந்திரபாயு நாயுடு, கேரள முதல்வர் உம்மன்சாண்டி, தேமுதிக தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேம லதா, மைத்துனர் சுதீஷ்,

தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தராஜன், தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், பாமக இளைரஞணி தலைவர் அன்புமணி உள்பட முக்கிய பிரமுகர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
இதைத்தொடர்ந்து, கலாம் உடலுக்கு முப்படை தளபதிகள் இறுதி மரியாதை செலுத்தினர். பின்னர், கலாமின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் பேக்கரும்பில் அப்துல்கலாம் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
Tags:
Today | 7, April 2025
Privacy and cookie settings