காஷ்மீரில் பலத்த மழை பெண்கள், சிறுவர்கள் உள்பட 5 பேர் பலி

காஷ்மீரில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
 
கந்தர்பால் மாவட்டத்தில் உள்ள கங்கன் என்ற கிராமம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று  பெய்த பேய் மழையால் அந்த பகுதிகளில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது.

இந்த திடீர் வெள்ளத்தில் 2 பெண்கள் அடித்து செல்லப்பட்டனர். அவர்களது உடல் நேற்று காலை நல்லாக் என்ற பகுதியில் இருந்து மீட்கப்பட்டது.

அமர்நாத் புனித யாத்திரைக்கு செல்லும் பாதையான பால்தல் மற்றும் பகல்கம் பகுதிகளில் பெய்த மழையால் உயிரிழந்த இக்ரா மஜித் (வயது 15), அகமது பாபா(10) என்ற 2 சிறுவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
மேலும் ருக்ஷனா (32) என்ற பெண்ணும், அவரது 4 வயது மகனான ஆகியூப் பாபா என்ற சிறுவனும் மாயமாகியுள்ளனர்.  

பகல்கம் பகுதியில் மன்சூர் அகமது என்ற சுமை தூக்கும் கூலி தொழிலாளி மின்னல் தாக்கி உயிரிழந்தார்.

பேய் மழையின் காரணமாக காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டதால் லடாக் காஷ்மீர் இடையிலான நெடுஞ்சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
Tags:
Privacy and cookie settings