கேரளாவில் ரப்பர் வெட்டும் தொழிலாளிக்கு ரூ.1 கோடி !

கேரள மாநிலம் பத்தினம் திட்டாவை அடுத்த கோளஞ்சேரியை சேர்ந்தவர் சந்திரன் (வயது 49). ரப்பர் பால் வெட்டும் தொழிலாளி.
கேரளாவில் ரப்பர் பால் வெட்டும் தொழிலாளிக்கு லாட்டரியில் ரூ.1 கோடி பரிசு
இவருக்கு மனைவியும், ஒரு மகள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர். வாடகை வீட்டில் குடியிருக்கும் இவர், கோளஞ்சேரியில் இருந்து புல்லாடு பகுதிக்கு சென்று ரப்பர் பால் வெட்டும் தொழில் செய்து வந்தார். மாலையில் வேலை முடிந்து வீட்டிற்கு செல்லும்போது கேரள அரசின் லாட்டரி சீட்டுகள் வாங்கி செல்வார்.

வழக்கம்போல கடந்த வாரமும் இவர், காருண்யா லாட்டரி வாங்கி இருந்தார். இந்த சீட்டுக்கு முதல் பரிசான ரூ.1 கோடி விழுந்தது.

சந்திரன் லாட்டரி சீட்டு வாங்கிய கடையின் உரிமையாளர் நேற்று இந்த தகவலை சந்திரனிடம் கூறினார். இதைக்கேட்டு மகிழ்ச்சி அடைந்த சந்திரன், நிருபர்களிடம் கூறியதாவது:–

28 ஆண்டுகளாக ரப்பர் பால் வெட்டும் தொழிலாளியாக இருக்கிறேன். அப்போது முதல் லாட்டரி சீட்டு வாங்கி வருகிறேன். பல முறை எனக்கு சிறிய அளவில் பரிசு தொகை கிடைத்துள்ளது.

இப்போதுதான் முதல் முறையாக ஒரு கோடி பரிசு விழுந்துள்ளது. இதைக் கொண்டு எனது மகளுக்கு நல்ல இடத்தில் திருமணம் செய்து வைப்பேன். எனது 2 மகன்களுக்கும் வீடு கட்டி கொடுப்பேன். மீதி இருக்கும் பணத்தை ஏழைகளுக்கு செலவழிப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:
Privacy and cookie settings