கர்ப்பமாக்கிய மாமன் மகனுடன் 17 வயது சிறுமிக்கு திருமணம் !

கர்ப்பமாக்கிய மாமன் மகனுடன், 17 வயது பெண்ணுக்கு திருமணம் நடைபெறவிருந்த போது, தடாலடியாக உள்ளே புகுந்து திருமணத்தை தடுத்து, அப்பெண்ணை காப்பகத்துக்கு அனுப்பி வைத்துள்ளது,
குழந்தைகள் நல கமிட்டி. இப்படி ஒரு சம்பவம் புதுச்சேரியில் நடந்துள்ளது. புதுச்சேரி, மங்களம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும்,

அவளது மாமன் மகன் ரமேஷுக்கும் (21) இடையே, கோயில் ஒன்றில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது.

இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் கர்ப்பத்தில் போய் முடிந்ததை அறிந்து கொண்ட இரு வீட்டாரும் திருமண ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

நான்கு மாத கர்ப்பிணியான 17 வயது சிறுமியும், திருமண கோலத்தில் மணவரை நோக்கி கிளம்ப தயாராகிக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த குழந்தைகள் நல கமிட்டியினர், சிறுமிக்கு 18 வயதாகவில்லை என்பதை காரணம் காண்பித்து, திருமணத்தை நிறுத்தினர். சிறுமியை காப்பகம் அனுப்பினர்.

போலீஸ் நடவடிக்கைக்கு பயந்த திருமண வீட்டார் தலைமறைவாகி விட்டனர். ரமேஷ் மீது மங்களம் காவல் நிலையத்தில், போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
குழந்தைகள் நல கமிட்டி தலைவி வித்யா ராம்குமாருக்கு கடந்த 11ம் தேதி, இத்திருமணம் குறித்து யாரோ போன் போட்டு தகவல் தெரிவித்துள்ளனர். 

எனவே தான், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பலாத்காரம் செய்து சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபருக்கு தண்டனை கிடைப்பது தான் நியாயம். 

அவருக்கே திருமணம் செய்து வைத்தால் பிறருக்கு ஊக்கம் கிடைத்து விடும் என்று கமிட்டி உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
Tags:
Privacy and cookie settings