தமிழக சட்டசபை தேர்தலுக்கான தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையைத் தயாரிக்கும் குழுவின் கூட்டம் ஆகஸ்ட் 2-ந் தேதியன்று நடைபெறும் என்று அதன் தலைவர் டி.ஆர். பாலு தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. தற்போதே தி.மு.க. களப் பணியைத் தொடங்கி விட்டது.
இதன் முதலாவது கூட்டம் ஆகஸ்ட் 2-ந் தேதியன்று சென்னையில் நடைபெறும் என்று அக்குழு தலைவர் டி.ஆர். பாலு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சட்டப் பேரவைப் பொதுத் தேர்தலையொட்டி திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுக் கூட்டம்
வருகிற 02.08.2015 ஞாயிறு அன்று காலை 10 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் நடைபெறும். அதுபோது தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு டி.ஆர். பாலு கூறியுள்ளார்

முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு தலைமையில் 9 பேர் கொண்ட தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவை நேற்று அக்கட்சி அறிவித்திருந்தது.