பிரிட்டனில் இறந்து பிறந்த குழந்தை சில நிமிடங்கள் கழித்து உயிர் பிழைத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவின் செம்ஸ்போர்ட் பகுதியை சேர்ந்தவர்கள் எபி மற்றும் லாரா தம்பதி.
ஓரின சேர்க்கை தம்பதிகளான இவர்கள் குழந்தை பெற்றுகொள்வதற்கு முடிவு செய்தனர். இதையடுத்து 10 ஆயிரம் பவுண்ட் செலவு செய்து அதற்கான சிகிச்சையை மேற்கொண்டனர்.
பின்னர் கர்ப்பமடைந்த லாரா அருகில் உள்ள புரூம்பீல்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தையின் மூளையில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக கூறினர்.
இந்நிலையில் அவருக்கு குழந்தை இறந்து பிறந்துள்ளது. குழந்தையை பார்த்த எபி மற்றும் லாரா தம்பதியினர் கதறி அழுதுள்ளனர்.
இந்நிலையில் 22 நிமிடங்கள் கழித்து குழந்தையின் மூச்சு இயங்க ஆரம்பித்துள்ளது. இதனால் ஆச்சரியம் அடைந்த மருத்துவர்கள் தகுந்த சிகிச்சைகள் அளித்து குழந்தையின் உயிரை காப்பாற்றினர்.
பின்னர் அந்த குழந்தைக்கு அவர்கள் ஜேக்கப் என்று பெயர் வைத்துள்ளனர்.
இது கூறித்து எபி கூறியதாவது, ஜேக்கப் ஒரு நிஜ வீரன். அவன் விரைவில் முழுமையாக குணமடைவான் என்று நாங்கள் நம்புகிறேம் என்று தெரிவித்துள்ளார்.