ஒபாமா எந்த சமயத்தை சேர்ந்தவர்? மீண்டும் பிரச்னை எழுந்துள்ளது !

அதிபர் பராக் ஒபாமாவின் தந்தைவழி தாத்தாவின் மூன்றாவது மனைவி, சாரா உமர், 90. இவர் கினியா நாட்டை சேர்ந்தவர். 
ஒபாமா எந்த சமயத்தை சேர்ந்தவர்? மீண்டும் பிரச்னை எழுந்துள்ளது !
சாரா உமர், தன் மகனும், பராக் ஒபாமாவின் சித்தப்பாவுமான சையது ஒபாமா மற்றும் பேரன் மூசா ஒபாமாவுடன், இஸ்லாமியர்கள் புனிதமாக கருதும், மெக்காவிற்கு சென்றுள்ளார்.

பின்னர் சவுதி அரேபியாவில் இருந்து வெளியாகும், 'அல்வதன்' பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், 

தன்னுடைய பேரன், முஸ்லிம் மதக் கோட்பாடுகளை ஏற்பதற்காக, நமாஸ் செய்வதற்கு கற்று வருவதாகக் கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் தந்தை ஓன்யாங் ஹூசைன் ஒபாமா, கினியாவை சேர்ந்த முஸ்லிம். அவரது தாய் ஏன் டன்ஹம் அமெரிக்காவை சேர்ந்தவர். 

பராக் ஒபாமா, அமெரிக்க அதிபரானதற்கு பின், முஸ்லிம் என்பதை மறுத்து வந்தார். பல சந்தர்ப்பங்களில், தன்னை கிறிஸ்தவராக, ஒபாமா கூறியுள்ளார்.
இந்நிலையில் ஒபாமாவின் மதம் குறித்த பிரச்னை மீண்டும் எழுந்துள்ளது. அமெரிக்க மக்களிடையே, அதிபர் ஒபாமாவின் மதம் குறித்த சந்தேகம் இப்போதும் உள்ளது. 

கடந்த ஆண்டு ஆகஸ்டில் நடத்தப்பட்ட ஒரு கருத்துக் கணிப்பில், ஒபாமா முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர் என்று, 18 சதவீதத்தினரும், கிறிஸ்தவர் என்று 34 சதவீதத்தினரும் கூறிஉள்ளனர்.
Tags:
Privacy and cookie settings