வடகொரியாவில் ராணுவ மந்திரியாக இருந்து வந்தவர் யோன் யோங் சோல். இவர் அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றின்போது, கண் அயர்ந்து தூங்கி விட்டார்,
அதில் ஆத்திரம் அடைந்த கிம் ஜாங் அன் அவருக்கு மரண தண்டனை விதித்தார்,
பொதுமக்கள் முன்னிலையில் அவர் பியாங்க்யாங்க் நகரில் கடந்த ஏப்ரல் மாதம் 30-ந் தேதி விமான எதிர்ப்பு பீரங்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார் என அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.
ஆனால் இதில் அரசியல் ஆய்வாளர்கள் சந்தேகமும் எழுப்பினர். இந்த நிலையில், அந்த நாட்டின் புதிய ராணுவ மந்திரியாக பாக் யோங் சிக் நியமிக்கப் பட்டுள்ளார்.
கிம் ஜாங் அன் இந்த நியமனத்தை செய்துள்ளார். உயர் ராணுவ அதிகாரிகள் பங்கேற்ற கூட்டம் ஒன்றில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இப்படி அந்த நாட்டில் ராணுவ மந்திரியின் நியமனம், அறிவிக்கப்படுவது இதுவே முதல் முறை என தகவல்கள் கூறுகின்றன.