160 பெட்ரோல் நிலையங்கள் மூடல் !

பெட்ரோல், டீசல் விற்பனையில் கலப்படம் செய்தது உள்ளிட்ட காரணங்களுக்காக 160 பெட்ரோல் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டதாக மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.
 
மக்களவையில் எழுத்து மூலமாக அளித்த பதிலில் அவர் மேலும் கூறியது: 

கடந்த 3 ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரி பொருள் விற்பனையில் அளவு குறைவாக விற்பனை செய்தது, கலப்படம் செய்தது உள்ளிட்ட காரணங்களுக்காக 160 பெட்ரோல் பங்குகளின் விற்பனை உரிமங்கள் (லைசென்ஸ்) ரத்து செய்யப்பட்டன. 

கலப்பட எரிபொருளை விற்ப வர்களது லைசென்ஸ்களை ரத்து செய்யும் விதிமுறையின்படி 160 விற்பனை நிலையங்களின் விற்பனை உரிமமம் ரத்து செய்யப் பட்டுள்ளது. 

கலப்படம் செய்வது, அளவில் தில்லுமுல்லு உள்ளிட்ட நடவடிக்கைகள் உத்தரப் பிரதேசம், தமிழகம், பஞ்சாப், மகாராஷ்டிர மாநிலங்களில் அதிகம் காணப்பட்ட தாக அவர் தெரிவித்தார். 
Tags:
Privacy and cookie settings