சீனாவில் முதலைக்கு முத்தமிடும் பெண்களுக்கு வேலை வாய்ப்பு !

சீனாவில் முதலைக்கு முத்தமிடும் பெண்களுக்கு வேலை வழங்கும் நிறுவனமொன்று அனைவரையும் ஆச்சரியத்திற்குட்படுத்தியுள்ளது.
சீனாவில் முதலைக்கு முத்தமிடும் பெண்களுக்கு வேலை வாய்ப்பு !
சீனாவிலுள்ள காங்டான் மாகாணத்தில் உள்ள காங்கோழு என்ற இடத்தில் சுகாதார பொருட்கள் விற்கும் நிறுவனம் ஒன்று உள்ளது.

இந்த பொருட்கள் அனைத்தும் முதலைகளில் இருந்து தயாரிக்கப்பட்டவை.

இந்த நிலையில் அந்த நிறுவனம் 9 விற்பனை பிரதிநிதிகளை பணியில் அமர்த்த திட்டமிட்டு அதற்கான நேர்முக தெரிவு நடத்தியது.

இதை அறிந்த பலர் வேலையில் சேர ஆர்வத்துடன் அங்கு குவிந்தனர். அங்கு நுழைவு வாயிலில் உயிருடன் ஒரு முதலை கட்டி வைக்கப் பட்டிருந்தது. 

நேர்முகத் தெரிவுக்கு சென்றவர்களுக்கு ஓர் அதிர்ச்சி தரும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதாவது, நுழைவு வாயிலில் இருக்கும் முதலைக்கு உதட்டுடன் உதடு சேர்த்து முத்தமிடும் பெண்கள் தான் நேர்முகத் தெரிவின் அடுத்த கட்டத்துக்கு செல்ல முடியும் என்று தெரிவிக்கப்பட்டது.

மேலும் அவர்களுக்கு ஆயிரம் யுவான் (சீனப்பணம்) பரிசு தொகை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த பணிக்கு பெண்கள் மட்டுமே தகுதி பெற்றவர்கள்.
ஆண்களுக்கு வேலை இல்லை என்றும் அறிவிக்கப்பட்டது. முதலில் முதலைக்கு முத்தமிட பல பெண்கள் தயங்கினர். இருந்தாலும் சிலர் தைரியமாக முன் வந்து முதலைக்கு முத்தமிட்டனர்.

முதலையில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்களாலேயே தங்களுடைய சுகாதார பொருட்கள் உற்பத்தி செய்யப்படுவதால் 

முதலையின் மீதான அச்சத்தில் இருந்து விடுபட இதுபோன்ற சோதனைகள் நடத்தப்படுவதாக அந்த நிறுவனம் விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tags:
Privacy and cookie settings