பொலீசாரின் உல்டா திட்டம் : 2வது முறையாக பெண் கற்பழிப்பு!

பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளியை பிடிக்கும் போலீசின் திட்டத்தால் இரண்டாவது முறையும் இளம்பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். 
மகாராஷ்டிர மாநிலம் ஜல்னா நகரை சேர்ந்த 17 வயது இளம்பெண், கடந்த 7 ஆம் தேதி மாலை தனது நண்பருடன் பேசியபடியே அங்குள்ள நவா சாலை வழியாக சென்றுள்ளார். அப்போது, சுமார் 20 வயது மதிக்கத்தக்க இரண்டு வாலிபர்கள் அவர்களை வழி மறித்து உள்ளனர்.

அதன்பின், அந்த பெண்ணுடன் வந்த நண்பரை கடுமையாக தாக்கி அங்கிருந்து விரட்டிவிட்டு, அந்தப் பெண்ணை அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு தூக்கிச் சென்றுள்ளனர். அங்கே, கத்தி முனையில் மிரட்டி அந்த இளம்பெண்ணை இரண்டு வாலிபர்களும் மாறி, மாறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் அந்த காட்சிகளை அந்தப் பெண்ணின் செல்போனிலேயே அவர்கள் வீடியோவாக பதிவும் செய்திருக்கின்றனர். அவர்களிடமிருந்து தப்பி வீட்டுக்குச் சென்ற அந்த இளம்பெண், தனக்கு நேர்ந்த கொடுமையை தாயிடம் கூறி அழுதுள்ளார்.

உடனே அவரது தாயார் இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரை பெற்று கொண்ட போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த 2 வாலிபர்களை தேடி வந்தனர்.

இந்நிலையில், அந்தப் பெண்ணின் தாயார் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர், உங்கள் மகளின் ஆபாசப்படத்துடனான செல்போன் எங்களிடம் உள்ளது.

குடும்ப மானத்தை காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்றால் உடனடியாக நாங்கள் கேட்கும் பணத்தை தந்துவிட்டு அந்த காட்சிகளுடன் கூடிய செல்போனை வாங்கிச் செல்லுங்கள் என்று கூறி இருக்கிறான்.

உடனே அந்த பெண்ணின் தாயார் இந்த விபரத்தை போலீசாரிடம் தெரிவித்து இருக்கிறார். இதையடுத்து அந்த குற்றவாளிகளை பிடிக்க போலீசார் திட்டம் தீட்டினர்.

மேலும், போலீசாரின் அறிவுரைப்படி தனது தாயிடம் பேசிய அந்த நபரின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்ட அந்த இளம்பெண், பணம் தயார், எங்கே வந்து கொடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளார்.

அதற்கு, ஜல்னா நகரில் உள்ள ஒரு மேம்பாலம் அருகே காத்திருப்பதாகவும், பணத்தை கொடுத்துவிட்டு செல்போனை வாங்கி செல்லுமாறு அவர்கள் கூறி இருக்கிறார்கள்.

இதை கேட்ட போலீசார், ''நீ பயப்படாமல் அங்கே போம்மா.... நாங்கள் மாறுவேடத்தில் உன் பின்னாடியே வந்து மறைந்து இருந்து பாலத்துக்கிட்டேயே அந்த வாலிபர்களை பிடித்து விடுகிறோம்" என்று தைரியமூட்டி அந்த இளம் பெண்ணை அனுப்பி வைத்துள்ளனர்.

அந்த பெண்ணும் தனக்கு போலீஸ் துணை உள்ளது என்று துணிச்சலாக நேற்று முன்தினம் மாலை தனது இருசக்கர வாகனத்தில் அந்த மேம்பாலத்தை நோக்கி சென்றுள்ளார்.

ஆனால் அந்த பெண் போகும் வழியிலேயே, இரு வாலிபர்களும் அவரை வழிமறித்து, அருகில் இருந்த புதருக்குள் தூக்கிச் சென்றுள்ளனர். அங்கே, இரண்டு வாலிபர்களும் அந்த இளம்பெண்ணை மீண்டும் கதற கதற பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இது தெரியாமல் பாலத்தின் அருகே குற்றவாளிகளை பிடிக்க காத்திருந்த போலீசார் அவர்கள் யாரும் அங்கு வராததால் காவல் நிலையத்திற்கே திரும்பி இருக்கின்றனர்.

காவல் நிலையத்திற்குள் போலீசார் நுழைந்தபோது, அங்கே சோர்ந்துப்போய் உடல் தளர்ந்த நிலையில் இரண்டாவது முறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட இளம்[பெண் காத்திருந்துள்ளார்.

இந்த சம்பவத்தில் கடுப்பான போலீசார் தீவிர தேடுதல் வேட்டைக்கு பின் அந்த இரண்டு வாலிபர்களையும் நேற்று கைது செய்து, அவர்களிடம் இருந்த அந்த பெண்ணின் செல்போனையும் பறிமுதல் செய்திருக்கின்றனர்.

இந்த சம்பவங்கள் பற்றி கேள்விப்பட்ட மகாராஷ்டிர மாநில போலீஸ் ஐ.ஜி. விஷ்வாஸ் நக்ரே, அந்த காவல் நிலையத்திற்கு விரைந்து சென்று இந்த சம்பவம் பற்றி விரிவான விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

மேலும், அந்த இரண்டு வாலிபர்களையும் பிடிக்க திட்டம் தீட்டிய உதவி இன்ஸ்பெக்டர் வினோத் எஜாப்வர் என்பவரை உடனடியாக சஸ்பெண்ட் செய்துள்ளார்.
Tags:
Privacy and cookie settings