போரூர் ஏரியை மீட்கக்கோரி போராட்டம் நடத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ பீம்ராவ் கைது செய்யப்பட்டார். அவருடன் போராட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியினரும் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சென்னைக்கு குடிநீர் வழங்கும் போரூர் ஏரியை முழுமையாக மீட்டு கையகப்படுத்தி பாதுகாக்க கோரி இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதற்காக மதுரவாயல் தொகுதி எம்.எல்.ஏ. பீம்ராவ் தலைமையில் கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றும் பெண்கள், பொதுமக்கள் என 200 பேர் இன்று காலை போரூர் ரவுண்டானாவில் திரண்டனர்.
பின்னர் அவர்கள் போரூர் ஏரியை மீட்டு பாதுகாக்க வேண்டும். போரூர் மேம்பால பணியை காலதாமதம் செய்யாமல் உடனே தொடங்க வேண்டும் என்று கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், சென்னைக்கு குடிநீர் வழங்கும் போரூர் ஏரியை அரசு மீட்டு முழுமையாக கையகப்படுத்த வேண்டும். அங்குள்ள குடிநீரை பாதுகாக்க வேண்டும்.
மேலும் போரூர் மேம்பால பணிகள் தாமதப்பட்டுக் கொண்டே செல்கிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பாதிக்கப்படுகிறார்கள். எனவே போரூர் மேம்பால பணியை உடனே தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
ஆர்ப்பாட்டத்தின் போது பீம்ராவ் எம்.எல்.ஏ. செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்க முயன்றார். அப்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்ற வலுக்கட்டாயமாக பிடித்து இழுத்தனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் போரூர் ரவுண்டானாவில் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சுமார் அரைமணி நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு உதவி கமிஷனர் குழந்தைவேலு விரைந்து வந்தார். பின்னர் போலீசார் மறியல் செய்தவர்களை வலுக்கட்டாயமாக வேனில் ஏற்ற முயன்றனர். பெண் போலீசார் பெண்களை பிடித்து இழுத்தனர். இதனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் போலீசாருக்கும் தள்ளுமுள்ளு மற்றும் கைகலப்பு ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பீம்ராவ் எம்.எல்.ஏ., பெண்கள் உள்பட 200 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை போலீஸ் வேனில் ஏற்றி திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.