சிம்லாவில் 2 பங்களா வாங்கிய பிரியங்கா காந்தி !

தகவல் அறியும் உரிமை சட்டம் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தின்படி எந்த ஒரு விவரத்தையும் அரசிடம் கேட்டு பெற முடியும்.


இப்போது அந்த சட்டம் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி மகள் பிரியங்கா காந்திக்கே சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.

இமாசலப் பிரதேச மாநிலம் சிம்லாவில் பிரியங்கா காந்தி 2 பங்களாக்களை வாங்கியுள்ளார். இது பற்றிய விவரங்களை அவர் தெரிவிக்க வேண்டும் என்று தேவ் ஆசிஸ் பட்டாச்சாரியா என்பவர் இமாசல பிரதேச தகவல் அறியும்  உரிமை ஆணையத்திடம் மனு கொடுத்து இருந்தார்.

இதையடுத்து அந்த மாநில தகவல் அறியும் உரிமை ஆணையம் பிரியங்கா காந்திக்கு நோட்டீஸ் அனுப்பி, சிம்லாவில் 2 பங்களாக்கள் வாங்கிய விவரங்களை கேட்டு இருந்தது.

ஆனால் பிரியங்கா காந்தி அந்த விவரங்களை வெளியிட வில்லை. பங்களா வாங்கியது தனிப்பட்ட விஷயம் என்று கூறி தகவல் தெரிவிக்க மறுத்து வந்தார்.

ஆனால் பிரியங்கா அந்த விவரங்களை உடனே தெரிவிக்க வேண்டும் என்று தகவல் அறியும் உரிமை ஆணையம் (ஆர்.டி.ஐ) உத்தர விட்டது.

இந்த நிலையில், கடந்த 6–ந் தேதி பிரியங்கா சிம்லா ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் கூறி இருப்பதாவது:–

தேவ் ஆசிஸ்பட்டாச் சாரியார் என்பவர் எனது சொத்து பற்றிய விவரங்களை கேட்டு தகவல் அறியும் உரிமை ஆணையத்தை கேட்டுள்ளார். இது தேவை இல்லாத ஒன்று.

 எனவே, எனது சொத்துக் விவரங்களை கேட்டுள்ள தகவல் அறியும் உரிமை ஆணையத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:
Privacy and cookie settings